தொடர்ந்து பெய்து வரும் கனமழை! பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை!

0
89

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்ற சூழ்நிலையில் நவம்பர் மாதம் எட்டாம் தேதி வரையில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது நீர்நிலைகள் நிறைந்து வருவதன் காரணமாக விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு என்னதான் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது இந்த சூழ்நிலையில் டெல்டா மாவட்டங்களில் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி வரையில் கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வட தமிழகத்தை ஒட்டி நிலவி வரக்கூடியவர் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை மக்களும் அதை தடை செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என கூறப்பட்டு உள்ளது.

மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், சேலம், கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. நவம்பர் மாதம் எட்டாம் தேதி வரையில் மழை நீடிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும், ஒரு சில சமயங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. சூறாவளி காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதால் மீனவர்கள் அரபிக் கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேரன்மாதேவி பகுதியில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. அம்பாசமுத்திரம் பகுதியில் 9 சென்டி மீட்டர் மழையும், மகாபலிபுரம், மண்டபம், பாளையங்கோட்டையில் தலா 8 சென்டி மீட்டர் மழையும், பதிவாகி இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருக்கின்றன. வயல்களில் தேங்கி இருக்கக்கூடிய மழை நீரை வெளியேற்றும் முயற்சியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.