சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை போக்குவரத்து நெரிசல்! ஆனால் மக்களிடையே காணப்படும் மகிழ்ச்சி ஏன் தெரியுமா?

0
111

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சாவூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, போன்ற மாவட்டங்களில் நேற்று மாலை தொடங்கிய மழை தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்கு மேலாக விட்டு,விட்டு பெய்து வந்தது ஆகவே பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலைகள் இன்று அதிகாலை முதல் சற்று நேரம் ஓய்ந்திருந்த மழை திடீரென்று மீண்டும் தற்போது பெய்ய தொடங்கியுள்ளது. கோடம்பாக்கம், தாம்பரம், கே கே நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், வயதாப்பேட்டை, போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், விருகம்பாக்கம், பூந்தமல்லி போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அதேபோல புறநகர் பகுதிகளான கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர், ஆவடி, அம்பத்தூர், ஊரப்பாக்கம் போன்ற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

சென்ற காலங்களில் சென்னையில் மழை பெய்த போது சுரங்கப்பாதை மற்றும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானது. ஆனால் இந்த முறை சென்னை மாநகராட்சி முன்னெடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு சுரங்க பாதைகளில் நீர் தேங்காமல் போக்குவரத்து செல்வதை காண முடிகிறது.