தமிழகத்தில் இந்த 18 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

0
67

தமிழகத்தில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் உள்ளிட்டவை காரணமாக, நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

எதிர்வரும் 15 , 16 , 17 , 18 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, தேனி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், புதுக்கோட்டை மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

அத்துடன் மேலே குறிப்பிடப்பட்ட தேதிகளில் லட்சத்தீவு பகுதி மற்றும் அதனையொட்டி இருக்கக்கூடிய குமரி கடல் பகுதியில் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா மற்றும் கடலோரப் பகுதிகள் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தென்கிழக்கு அரபிக்கடல் மத்திய கிழக்கு அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரையில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் குறிப்பிட்ட தேதிகளில் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.