முந்நூறு நோயை விரட்டும் முருங்கை..! “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு நடப்பான்..?

0
182

முந்நூறு நோயை விரட்டும் முருங்கை..! “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு நடப்பான்..?

முருங்கை மரத்தின் புகழையும், பயனையும் யாரும் முழுமையாக அறிந்து கொள்வதில்லை. “கீரைகளின் ராணி” என்று அழைக்கும் மகத்துவம் முருங்கை கீரைக்கு மட்டுமே உண்டு. ஏனெனில், முருங்கை பல்வேறு மருத்துவ குணங்களை உடைய இயற்கை மருத்துவமாகும்.

“முருங்கையை நட்டவர் வெறுங்கையோடு நடப்பார்” என்றொரு பழமொழி உண்டு. இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம் பலருக்கு தெரிவதில்லை. முருங்கையை நட்டால் வெறுங்கைதான் மிஞ்சும், வறுமைதான் மிஞ்சும் என்று தவறாக சொல்லப்படுகிறது. “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு நடப்பான்” என்றால், மனிதன் முதிர்ந்த வயதிலும் கோலூன்றாமல் ஆரோக்கியமாக இரு கைகளையும் வீசி நடப்பான் என்பதே உண்மையா பொருள்.

வீட்டிற்கு முன் பக்கம் வைத்தால் முனிவரும் என்றும், பின் பக்கம் வைத்தால் பேய்வரும் என்று கிராமங்களில் பேசப்படுவதை கேட்டு சிலர் முருங்கை மரத்தை வெட்டவும் செய்கிறார்கள். இது மிகத்தவறான விஷயம். முருங்கை முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்து பழமொழி. முருங்கையில் இலை, பூ, காய் என எல்லாமே இயற்கை மருத்துவ குணம் கொண்டவையாகும்.

முருங்கையின் பயன்கள் :

  • தயிரில் இருப்பதை விட முருங்கையில் இரண்டு மடங்கு அதிக புரதச்சத்து உள்ளது.
    ஆரஞ்சு பழத்தை விட மூன்று மடங்கு பொட்டாசியம் உள்ளது.
  • கேரட்டில் இருப்பதை விட நான்கு மடங்கு வைட்டமின் A உள்ளது. பசும்பாலில் உள்ளதை விட பல மடங்கு கால்சியம் முருங்கையில் உள்ளது.
  • இயற்கையின் அடிப்படையில் முருங்கை கீரையில்தான் அதிக இரும்புச் சத்து உள்ளது.
  • முருங்கை கீரையை மிளகு சேர்த்து சூப் வைத்து குடித்தால் ஆஸ்துமா, சுவாச கோளாறுகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.
  • பெண்கள் முருங்கை கீரையுடன் வேர்க் கடலை சேர்த்து சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.
  • ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்தசோகை, உடல் சோர்வு, மனச்சோர்வுகளை நீக்குகிறது.
  • சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தி உடலை பாதுகாக்கிறது. முருங்கையில் இருக்கும் வைட்டமின் A சத்து கண் பார்வைக்கு நல்லது.
  • ஆண், பெண் இருவருக்குமான மலட்டுத்தன்மையை போக்கி, இளமையாக பொலிவு பெற முருங்கை உதவுகிறது.
  • பச்சையான முருங்கை இலைச்சாறு ஒரு டம்ளர் எடுத்துக்கொண்டு அதில் பாதியளவு எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டு வந்தால் உடல் தொப்பை குறைந்து நல்ல தேகம் கிடைக்கும்.
  • முருங்கைப் பூ பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி நிரந்தரமாக குணமாகும். முருங்கை சாறுடன் சிறிது உப்புக் கரைசலை சேர்த்து குடித்தால் மலச்சிக்கல் சரியாகும்.
  • மனித உடம்பிற்கு தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 அமிலங்கள் முருங்கை கீரையில் உள்ளது. மேலும் மாமிசத்தில் இருப்பதை போலவே புரதச் சத்துக்களும் உள்ளன.

குறிப்பு : பல்வேறு நோய்களை விரட்டும் முருங்கையை நாம் தவிர்க்கவே கூடாது.

author avatar
Jayachandiran