ஆயுளை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த ஓர் காய் போதும்:!!

0
79

ஆயுளை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த ஓர் கனி போதும்:!!

இயற்கை கொடுத்த ஓர் வர பிரசாதம் என்றால் அதை நெல்லிக்கனியை மறுக்காமல் கூறலாம்.ஏனெனில் நெல்லிக்கனியில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளன.
இரண்டு வகையான நெல்லிக்கனிகள் உள்ளன.அதில் மலை நெல்லிக்காய் அல்லது காட்டு நெல்லிக்காய் என்றழைக்கப்படும் நெல்லிக்கனியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

இந்த அற்புதமான நெல்லிக்கனியை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால்,முதுமையை குறைத்து ஆயுளை அதிகரிக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?அது மட்டுமின்றி இந்த ஒரு நெல்லிக்கனியானது மூன்று ஆப்பிளுக்கு சமமாகும்.அதாவது ஒரு நெல்லிக்கனியில் 600 மில்லி கிராம் விட்டமின் சி உள்ளது..

இந்த நெல்லிக்கனியை
தினமும் சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்களை பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

* தினமும் ஒரு நெல்லிக்கனியை மென்று சாப்பிட்டு வந்தால் இன்சுலினை சமன் செய்து சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

* ரத்தத்தை சுத்திகரிக்க இந்த நெல்லிக்கனியானது பெரிதும் பங்கு வகிக்கிறது.

*ஹீமோகுளோபினை அதிகரிக்க இந்த நெல்லிக்கனி உதவுகிறது.

* தோல் பளபளப்பாக இருக்க இந்த நெல்லிக்கனி உதவுகிறது.

* உதிர்வு பிரச்சனையை சரி செய்ய இந்த நெல்லிக்கனியானது பெரிதும் பயன்படுகிறது.

*உடலில் ஏற்படும் நாள்பட்ட உள் புண் மற்றும் வெளி புண்களை சரி செய்ய இந்த நெல்லிக்கனி பயன்படுகிறது.

* மலச்சிக்கலை போக்க நெல்லிக்கனி பெரிதும் உதவுகிறது.

* கர்ப்பிணி பெண்கள் தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டு வருவதால் ரத்தத்தின் அளவை அதிகரிப்பதோடு சுகப்பிரசவத்திற்கும் உதவுகிறது.

* தினமும் நெல்லிக்கனியை சாப்பிடுவதால் கருப்பை பலப்படும்.இதனால் குழந்தையின்மை பிரச்சனை நீங்கும்.

*உடலில் வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்துகிறது.

author avatar
Pavithra