குழந்தைகளுக்கு மழை காலத்தில் ஏற்பட்ட சளி ஒரே இரவில் மலம் வழியே வெளியேற இதனை செய்யுங்கள்!!

0
80

குழந்தைகளுக்கு மழை காலத்தில் ஏற்பட்ட சளி ஒரே இரவில் மலம் வழியே வெளியேற இதனை செய்யுங்கள்!!

சில வாரங்களாக விடாது கனமழை பெய்து வரும் காரணத்தினாலும், கடந்த சில நாட்களாக அதிக அளவு பனி செய்துவரும் காரணத்தினாலும் பெரும்பாலான குழந்தைகளுக்கு சளி பிடித்து பெரிதும் துன்பப்படுகின்றனர்.
இவ்வாறு மழைக்காலத்தில் ஏற்பட்ட சளியை ஒன்றிலிருந்து மூன்று நாட்களுக்குள் மலம் வழியே வெளியேற்ற கீழ்கண்ட ஏதேனும் ஒரு முறையை பின்பற்றுங்கள்.

tips 1:

கற்பூரவள்ளி இலையை மூன்றிலிருந்து நான்கு இலைகள் எடுத்து அதனை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.பின்பு ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தை அரிசி வடிக்கும் தட்டை வைத்து மூடவேண்டும்.அந்த தட்டின் மீது கழுவிய கற்பூரவள்ளி இலையை வைத்து அதன் மீது காற்று போகாதவாறு தட்டை வைத்து மூடி 1-2 நிமிடங்கள் ஆவில் வேக வைக்க வேண்டும்.

பின்பு இந்த ஆவில் வெந்த கற்பூரவள்ளி இலையை எடுத்து அதன் சாற்றை நன்றாக பிழிந்து குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் கொடுக்க வேண்டும்.இவ்வாறு ஒன்று முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து கொடுத்தால் குழந்தைகளின் சளி மலம் வெளியேறிவிடும்.இரும்பலும் குணமாகும்.

இதனை முன்று மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எட்டு சொட்டும்,6 மாதத்திற்கு மேல் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கால் சங்கு அளவும் ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அரை சங்கு அளவும் கொடுக்கலாம்.

tips 2:

ஒரு வெற்றிலை ஐந்து துளசி இரண்டையும் நன்றாக கழுவி எடுத்து கசக்கி சாறு எடுத்து ஒன்பது மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எட்டு சொட்டு வீதமும் ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கால் சங்கு அளவு கொடுக்க வேண்டும்.

author avatar
Pavithra