இளநரை மற்றும் பொடுகு நீங்க! இதை 2 முறை போடுங்க!

ஆண்கள் ஆனாலும் சரி பெண்களுக்கும் மிகவும் அருமையான இளநரை மற்றும் பொடுகு நீங்குவதற்கான அற்புதமான செயல்முறை ஒன்று தான் பார்க்க போகின்றோம். இது மிகவும் எளிதானது மேலும் இதை நீங்கள் இரண்டு முறை பயன்படுத்தினாலே போதும். இளநரை மற்றும் பொடுகு ஆகியவை ஏங்கி உங்களது முடி மிகவும் நன்கு கருமையாகவும் மென்மையாகவும் மாறும்.

தேவையான பொருட்கள்:

1. உலர்ந்த நெல்லிக்காய் வற்றல்

2. கற்றாழை ஜெல்

3. எலுமிச்சை பழச்சாறு.

செய்முறை:

1. முதலில் நாட்டு மருந்து கடைகளில் உலர்ந்த நெல்லிக்காய் வற்றல் என்று சொல்லி வாங்கிக் கொள்ளுங்கள்.

2. அந்த நெல்லிக்காய் வற்றலை வாங்கி மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள். உங்கள் நெல்லிக்காய் பொடி என்று கேட்டாலே நாட்டு மருந்து கடைகளில் தருவார்கள். ஆனால் இந்த மாதிரி நீங்களே அரைத்து பயன்படுத்தும் பொழுது உங்களுக்கு மிகவும் நன்மை அளிக்கிறது.

3. இப்பொழுது ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள்.

4. அதில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்கள்.

5. அதில் பொடி செய்து வைத்த நெல்லிக்காய் வற்றல் பொடியை மூன்று ஸ்பூன் அளவுக்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.

6. இதில் அறை எலுமிச்சை பழத்தை புழிந்து கொள்ளுங்கள்.

7. ஒரு சில நபர்களுக்கு இந்த மாதிரியான ஹேர் பேக் போடும் பொழுது சளி மற்றும் பல தொந்தரவுகள் இருக்கும். அதனால் இந்த சளி தொந்தரவு வராமல் இருக்க அரை இஞ்சி துண்டை அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு இஞ்சி சாறை இந்த கலவையுடன் சேர்த்துக் கொண்டால் எந்த பிரச்சனையும் வராது.

8. இப்பொழுது இரண்டு ஸ்பூன் அளவுக்கு தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

9. இப்பொழுது இதை நன்றாக கலந்து கொள்ளவும்.

10. இதை உங்களது தலையில் நன்கு படும்படி அனைத்து இடங்களிலும் தேய்த்துக் கொள்ளவும்.

11. அரை மணி நேரம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி கழுவிக்கொள்ளலாம்.

12. இதனை நீங்கள் வாரம் இரண்டு முறை செய்து வரும்பொழுது உங்களுக்கு இளநரை பொடுகு மற்றும் அரிப்பு ஆகியவை எதுவும் இருக்காது.

13. முடி நன்கு வளரும், கருமையாகவும் இருக்கும். முடி உதிர்வு இருக்காது பொடுகும் நீங்கிவிடும்.

">
Exit mobile version