நோய்த்தொற்று பரவல்! அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் முக்கிய உத்தரவை வெளியிட்ட சுகாதாரத்துறை செயலாளர்!

0
100

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இருக்கின்ற மருந்து சேமிப்பு கிடங்கு சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மருத்துவர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் நேற்றைய தினம் ஆய்வு செய்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார்.

அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் நோய் தோற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. அதோடு இந்த மாத தொகுப்பிற்கு தற்சமயம் வரையில் 63 லட்சத்து 76 ஆயிரம் தடுப்பூசிகள் வருகை தந்து இருக்கின்றன என்று கூறியிருக்கிறார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

அப்படி வருகை தந்திருக்கும் தடுப்பூசிகளின் கூடுதலாக மத்திய அரசு ஐந்து லட்சத்து 89 ஆயிரம் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு கொடுத்திருக்கிறது. மீதம் இருக்கின்ற 16 லட்சத்து 75 ஆயிரம் தடுப்பூசிகளையும் மிக விரைவில் கொடுப்பதற்காக மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல எதிர்வரும் மாதத்தில் மத்திய அரசு 1.04 கோடி தடுப்பூசி வழங்க இருக்கிறது. தற்சமயம் 14 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் வைக்கப்பட்டு இருக்கிறது இந்த தடுப்பூசிகள் மூன்று தினங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் ராதாகிருஷ்ணன்.

அதோடு கேரள மாநிலத்தில் பண்டிகையின் காரணமாக, நோய்த் தொற்று அதிகரித்திருக்கிறது அதேபோல தமிழ்நாட்டிலும் அதிகரித்துவிடாதவாறு நடவடிக்கை மேற்கொள்வதற்கு அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் அடுத்த 10 தினங்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் ராதாகிருஷ்ணன்.

கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எல்லை பகுதிகளில் இருக்கின்ற கிராமங்களில் அனுதினமும் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று வருபவர்களுக்கு 100% தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்வதற்கு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது அறை ஏற்பட்டாலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தயாராக இருக்கிறது. அதோடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் யாரும் விழிப்புணர்வு இல்லாமல் இருக்க வேண்டாம் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அதே போல முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவதால் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என தெரிவித்து இருக்கிறார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.