மருத்துவர்கள் மீது பணிமுறிவு நடவடிக்கை பாயும்! அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

0
76

மருத்துவர்கள் மீது பணிமுறிவு நடவடிக்கை பாயும்! அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

பணிக்கு வராமல் போராட்டத்தில் ‌‌ஈடுபடும் மருத்தவர்கள் மீது பிரேக்கிங் இன் சர்வீஸ்(பணி‌ முறிவு) நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதிகப்படியான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மருத்துவர்களின் போராட்டம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர பீலா ராஜேஷ் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோருடன் துறை சார்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவர்கள் போரட்டத்தை கைவிட்டு அனைவரையும் பணிக்கு திரும்ப வேண்டுகோள் விடுத்தோம். பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை தீவிரமாக பரிசீலித்து வந்தோம். இந்த சூழ்நிலையில் பணிக்கு நாளை திரும்பி வராவிட்டால் அரசு தரப்பில் பிரேக்கிங் சர்வீஸ் எனப்படும் பணி முறிவு ஆக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கையை அரசு எடுக்கும்.

மதியம் 2 மணிக்கு மேல் பணிக்கு வராதவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டு காலி பணியிடமாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதிய மருத்துவர்கள் அரசு சார்பில் நியமனம் செய்யப்படுவார்கள் .

பிரேக்கிங் இன் சர்வீஸ் அதாவது பணி முறிவு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசு மருத்துவர்களின் பணி மூப்பு சலுகை ரத்தாகும்.
பொதுமக்கள் நலன் முக்கியம் என்பதால் அரசு அவர்களின் நலன் சார்ந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here