பொதுமக்களுக்கு சுகாதார துறையின் எச்சரிக்கை!! தொடர்மழையை தொடர்ந்து வரும் அடுத்த ஆபத்து!! 

0
104
Health department warning to the public!! The next danger that follows the monsoon!!
Health department warning to the public!! The next danger that follows the monsoon!!

பொதுமக்களுக்கு சுகாதார துறையின் எச்சரிக்கை!! தொடர்மழையை தொடர்ந்து வரும் அடுத்த ஆபத்து!! 

தமிழ்நாட்டியில் ஜூன் 18 – ஆம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை பல இடங்களில் பெய்து வருகிறது. மேலும் பல இடங்களில் லேசான மழையாகவும், சில இடங்களில் கனமழையாகவும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கனத்த மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல சிரமமாக இருக்கும் என்பதால் குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு பள்ளிகள்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மழையானது  மூன்று நாள் வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதனையடுத்து மழைக்காலம் வந்தவுடன் சிலவகை காயச்சல்களும் பரவ வாய்ப்புள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு டெங்கு என்ற கொடிய நோய் பரவி மக்களை அச்சுறுத்தி வந்தது. மேலும் இதன் காரணமாக இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் படி அனைத்து மாவட்டகளிலும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் மழை நீர் தேங்கும் இடம் கொசுக்கள் உருவாகும் இடத்தை  கண்டறிந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் மழைநீரில் அதிகம் உருவாகும். அதனை விரைவில் கண்டறிந்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அனைத்து மாவட்டங்களையும்  அறிவுறுத்தியுள்ளது.

author avatar
Jeevitha