Connect with us

Astrology

தலைவலி பிரச்சனையா!! இயற்கையான முறையில் சரி செய்ய இதை மட்டும் செய்யுங்கள்!!

Published

on

தலைவலி பிரச்சனையா!! இயற்கையான முறையில் சரி செய்ய இதை மட்டும் செய்யுங்கள்!!

நம் வீட்டைச் சுற்றி இயற்கையாகவே விளையும் கற்பூரவள்ளி செடிகளின் இலைகள், நம் சளிப் பிரச்சனைகளுக்கு வழங்கும் அற்புதத் தீர்வுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Advertisement

கற்பூரவள்ளி இலைய சாதரணமா அப்படியே எடுத்து மென்னு சாப்பிடலாம். இல்லேன்னா தேனோட சேர்த்தும் சாப்பிடலாம். இந்த இலைய தேங்காய், பருப்பு, மிளகாய்வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து அரைச்சு சட்னியாக சாப்பிடலாம். இந்த இலைய சாறெடுத்து நல்லெண்ணெய் சர்க்கரையோட சேத்து நல்லா கலக்கி நெற்றியில பற்றுப்போடலாம். அப்படி செஞ்சா ஜலதோஷத்துனால வர்ற தலைவலி நீங்கும். குழந்தைகளுக்கு வர்ற அஜீரண வாந்திய இந்த மூலிகை நிறுத்தக்கூடியது.

5 – கற்பூரவள்ளி இலைகள், 5 – மிளகு, 1 வெற்றிலை கொதிக்க வைத்து அந்த நீரை 60 மில்லி லிட்டர் காலை, மாலை – பருகலாம். குழந்தைகளுக்கு 20-&30 மில்லி லிட்டர் வரை அருந்தி வர நுரையீரல் சளி, ஆஸ்துமா, காசநோய், நாள்பட்ட சளி குணமாகும்.

Advertisement

நமது உடலின் மேற்பரப்பான தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, செரி, அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. கற் பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

 

Advertisement