பூச்சிகளை வைட்டமின்கள் என சாப்பிட வைத்த தலைமை ஆசிரியை! உயிருக்கே ஆபத்தான மதிய உணவு திட்டம்!

0
81
Head teacher made to eat insects as vitamins! Life-threatening lunch program!
Head teacher made to eat insects as vitamins! Life-threatening lunch program! Head teacher made to eat insects as vitamins! Life-threatening lunch program!

பூச்சிகளை வைட்டமின்கள் என சாப்பிட வைத்த தலைமை ஆசிரியை! உயிருக்கே ஆபத்தான மதிய உணவு திட்டம்!

பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை முதன் முதலில் எம்ஜிஆர் அவர்கள் கொண்டு வந்தார். அதற்குப் பின்பு தான் ஒவ்வொரு மாநிலத்திலும் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும் பல இடங்களில் குழந்தைகளின் உணவிற்காக ஒதுக்கப்படும் பணத்தை சரியான முறையில் அதற்கு உபயோகிப்பதில்லை. தரமான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்காமல் தர மற்ற உணவுகளை வழங்கி வருகின்றனர்.குறிப்பாக பீகார் மாநிலத்தில் உச்சகட்ட செயலாக இரண்டுமே தற்பொழுது ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

அதில், பீகார் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பட்டியலில் கூறப்படும் உணவுகள் வழங்கப்படாமல் வந்துள்ளனர். அதற்கு மாறாக வெறும் சாதமும் உப்பும் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கி வந்துள்ளனர். இதனை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். ஆனால் அதனை தட்டிக் கேட்காமல் அவ்வாறு வீடியோ பதிவிட்ட வரை அந்த அரசு ஜெயிலில் அடைத்தது.

இதற்கு அடுத்த கட்டமாக ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு, பூச்சிகள் நிறைந்த சாப்பாட்டை வழங்கியுள்ளனர். அங்குள்ள மாணவர்கள் தங்கள் உண்ணும் உணவில் பூச்சிகள் அதிக அளவில் இருப்பதாக ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் ஆனது தலைமை ஆசிரியர் வரை சென்றுள்ளது. அவரோ இது குறித்து நடவடிக்கை எடுக்காமல், பூச்சி என்பது வைட்டமின் தான் இதை சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது சாப்பிடுங்கள் என்று கட்டாயப்படுத்தி உள்ளார்.

குழந்தைகளும் தினம்தோறும் சாப்பாட்டுடன் அதில் உள்ள பூச்சிகளையும் உண்டு வந்துள்ளனர். இதில் சில குழந்தைகள் தங்களது வீட்டில் நாங்கள் தினம் தோறும் பள்ளியில் பூச்சிகளை உண்கிறோம் என்று கூறியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டும், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இது குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் இது சம்பந்தப்பட்டவர்களின் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.