முக்கிய அமைச்சர் சசிகலா அணிக்கு சென்றுவிடாமல் இருக்க முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

0
55

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே இருக்கின்ற குள்ளம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றார் முதன்முறையாக 1977 ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் இருந்தும் அதன் பிறகு எட்டு முறை கோபிசெட்டிபாளையத்தில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதிமுகவில் ஜெயலலிதா அணி ஜானகி அணி என்று இரு அணிகளாக பிரிந்து இருந்த போது ஜெயலலிதா சார்பாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி பெற்றவர்.

வனத்துறை அமைச்சர் போக்குவரத்து துறை அமைச்சர் விவசாயத்துறை அமைச்சர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அவர்களிடத்தில் வருவாய் துறை அமைச்சர் என்று பணியாற்றியிருக்கின்றார் 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் செங்கோட்டையன்.

ஆனால் கட்சி அரசியல் சம்மந்தமாக அவர் எந்த ஒரு அணியிலும் இடம் பெறவில்லை தனித்து செயல்பட்டு வந்தார் கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவைத்து இருந்தபோதே முதல்வராக வேண்டும் என்று நினைத்தால் அப்போது அது ஒரு சில காரணங்களால் அது நடைபெறாமல் போனது கூவத்தூரில் துணிச்சலாக காய்களை நகர்த்தி இருந்தால் அவர் உறுதியாக முதல்வராக இருப்பார் அவர் அவ்வாறு செய்யாத காரணத்தால் முதல்வராக இயலவில்லை ஆனால் இப்போதும் சசிகலா குடும்பத்துடன் அவருக்கு நட்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது டிடிவி அணியை சார்ந்த ஆட்கள் திவாகரன் குடும்பம் மற்றும் இளவரசி குடும்பம் என்று அனைவருடனும் தொடர்பில் இருப்பதாகவும் தகவல் சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்துவிட்டால் தன்னை முதல்வர் ஆக்குவார் என்று நினைத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அறிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையை சமாதானம் செய்யும் விதமாக அடுத்து தன்னுடைய சாதிகாரருக்கு முக்கிய பதவி வாங்கித் தருவதை உறுதி செய்யும் விதமாக அதே நேரத்தில் சசிகலா பக்கம் சென்று விடக்கூடாதே என்ற காரணத்திற்காக மத்தியில் ஆளும் பாஜகவின் தலைமையிடம் பேசி செங்கோட்டையனுக்கு ஆளுநர் பதவி வாங்கி தருவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதற்கு பாஜகவின் மத்திய அரசு இசைவு அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது சட்டசபை தேர்தலில் அந்த அமைச்சர் செங்கோட்டையன் போட்டியிட வில்லை என்றால் அவர் கவர்னர் ஆவது நிச்சயம் என்று அறிவிக்கிறார்கள்.