நாம் ஏன் மீனை சைவத்தில் சேர்க்க கூடாது? ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி!!

0
90
Why shouldn't we include fish in vegetarianism? Governor Tamilisai Soundarrajan Interview!!
Why shouldn't we include fish in vegetarianism? Governor Tamilisai Soundarrajan Interview!!

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் மீனை சைவத்தில் சேர்க்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். 

இந்த உலகத்தில் இருவகையான உணவுகள் உள்ளது. ஆடு, கோழி போன்று உயிரனங்களை உணவாக எடுத்துக் கொள்வதை அசைவம் என்றும் வெறும் காய்கறிகளை மட்டும் உணவாக எடுத்துக் கொள்வதை சைவம் என்றும் அழைப்பர். உலகம் முழுவதும் உணவுகள் சைவம் அசைவம் இரண்டு பொதுவான வகையில்தான் பிரிந்து இருக்கின்றது.நம்மில் பலருக்கும் அசைவ உணவுகளை உண்பதற்கு அதிகம் பிடிக்கும்.காய்கறிகள் உள்ள சைவ உணவுகளை உண்பதற்கு சிலருக்கு மட்டுமே பிடிக்கும். 

கோழியின் இறைச்சி அசைவ உணவை சேர்ந்த உணவு பொருளாகும். உயிருடன் உள்ள கோழி போடும் முட்டையானது அதுவும் அசைவம் தான். ஆனால் இன்று வரை இந்த முட்டை வகை சைவமா அல்லது அசைவமா எனறு தெரியாமல் பலர் குழப்பத்தில் உள்ளனர்.இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் மீனை சைவத்தில் சேர்க்கலாம் என்று பேட்டி அளித்துள்ளார்.

புதுச்சேரி ஆளுநர்  சமீபத்தில் அளித்த பேட்டியில் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. தமிழக பகுதிகளில் கற்தள் கொட்டப்பட்டு உள்ளது.இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி இரண்டு மாநிலங்களும் கடல் அரிப்பை தடுக்க பேச்சு வார்த்தை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இந்தியாவில் முதல் முறையாக புதுச்சேரி மாநில அரசு நீலப் புரட்சிக்காக கையெழுத்து போட்டுள்ளது. மத்திய அரசானது புதுச்சேரி மாநிலத்தை 42 கிலோ மீட்டர் நீலப் பொருளாதார மணடலமாக மாற்றுவதற்கு தேர்வு செய்துள்ளது.மத்திய அரசுக்கு அந்தளவு அதிக பாசமும் அககரையும் புதுச்சேரி மாநிலத்தின் மீது உள்ளது.

கோழி போடும் முட்டை மட்டுமில்லாமல் முட்டை சாப்பிடக் கூடிய முட்டை வகைகளை அசைவத்தில் சேர்ப்பதா அல்லது சைவத்தில சேர்ப்பதா என்ற பிரச்சனை இன்றளவும் இருந்து வருகின்றது.முட்டையை போலவே மீனை சாப்பிடுவோர் அசைவம் என்றும் மீனை சாப்பிடாதோர் சைவம் என்றும் கருத்து நிலவி வருகின்றது. எனக்கு மீன் அதிகளவு பிடித்தமான உணவுப் பொருள். என்னைப் பொருத்த வரை மீனை சைவத்தில் சேர்க்கலாம்.இதனால் மீனவர்களின் வாழ்வு மேம்படும்” என்று பேட்டியளித்துள்ளார்.