காங்கிரஸை அவமானப்படுத்திய முக்கிய தலைவர்!

0
61

கர்நாடகாவில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தால் மாநில மக்களிடம் இருந்த மற்றும் 12 வருடங்கள் பராமரித்து வந்த நற்பெயரை இழந்து விட்டதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் எச். டி குமாரசாமி தெரிவித்திருக்கின்றார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சருமான ஹச்.டி குமாரசாமி மைசூரில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் தெரிவித்ததாவது பாரதிய ஜனதா கட்சிக்கு அதிகாரத்தை மாற்றவில்லை என்ற காரணத்திற்காக எனக்கு எதிராக மிகப்பெரிய பிரச்சாரம் நடந்து வந்த போதிலும் 2006-07 வருடங்களில் நான் முதல்வராக இருந்தபோது கர்நாடக மக்களிடம் நான் சம்பாதித்து வைத்த நற்பெயரை 12 ஆண்டுகளாக நான் பராமரித்து வந்தேன்.

ஆனாலும் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்த காரணத்தால் அவை அனைத்தும் அழிந்து போய்விட்டது மதச்சார்பற்ற ஜனதா தளம் பாரதிய ஜனதாவின் பி டீம் என காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்தது சித்தராமையா என்னை மிகவும் அவதூறு செய்வதற்கு திட்டமிட்டார் அதுவே என்னுடைய அரசின் வீழ்ச்சிக்கான காரணம் நான் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து இருக்கக்கூடாது ஆனாலும் கட்சியின் தலைவர் ஹெச்.டி தேவகவுடாவின் வலியுறுத்தல் காரணமாக காங்கிரஸுடன் கைகோர்க்க ஒப்புக்கொண்டேன் இது இப்போது என்னுடைய கட்சியின் வலிமையை இறப்பதற்கு காரணமாகிவிட்டது.

தேவகவுடாவின் உணர்ச்சிகரமான உணர்வுகளுக்கு நான் மயங்கிவிட்டேன் அதன் காரணமாக கடந்த மூன்று தேர்தல்களில் 28 முதல் 40 இடங்களை வென்ற என்னுடைய கட்சி பாதிக்கப்பட்டு இருக்கின்றது இவ்வாறு அவர் தெரிவித்தார் குமாரசாமி குற்றச்சாட்டிற்கு சித்தராமையா பதிலடி கொடுத்து இருக்கின்றார் சித்தராமையா இது சம்பந்தமாக தெரிவிக்கையில் குமாரசாமி பொய் கூறுவதில் நிபுணர் மற்றும் கண்ணீர் சிந்துவது அவருடைய குடும்பத்தின் கலாச்சாரம் என்று தெரிவித்திருக்கின்றார்.