கொரோனாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை – அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

0
59

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் பரவத் துவங்கிய கொரோனா தொற்றுக்கு இது வரை சுமார் லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் பாதிப்படைந்துள்ளனர். தற்போது வரை கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறி சார்ந்த மருந்துகளையே மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக அலோபதி மருந்துகளுடன், ஹோமியோபதி, சித்த ஆயுர்வேத மருந்து உள்ளிட்டவற்றையும் கொரோனா நோயாளிகளுக்கு, கொரோனா வராமல் தடுக்க பொதுமக்களுக்கும் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில் “1979ல் 112 வகையான நோய்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசும் கடந்த 2003 ம் ஆண்டு முதல் இயற்கை முறையிலாக அக்குபஞ்சர் முறையை அங்கீகரித்து வருகிறது. பரவிவிரும் கொரோனா நோய்த்தொற்று நோயைக் கட்டுப்படுத்த சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியுமா என மத்திய அரசு, குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது.

கொரோனா நோய்த்தொற்று தொற்றுக்கு ஆங்கில மருத்துவ முறையில் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அக்குபஞ்சர் முறை மூலமாக சீனாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தப்பட்டது என்பதை உலக சுகாதார நிறுவனமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

சீனாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 85.2% அதாவது 60,107 பேருக்கு அலோபதி மருத்துவத்துடன், அக்குபஞ்சர் சிகிச்சையும் சேர்த்து வழங்கப்பட்டது. அதேபோன்று இந்தியாவிலும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிக்குச் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும்.

அக்குபஞ்சர் சிகிச்சை முறை மூலமாக “3 ml albino immuno immunoglobulin” உடலில் உற்பத்தி செய்யப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க காரணமாகிறது. மாத்திரைகள் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அக்குபஞ்சர் மருத்துவ சிகிச்சையில் 1 லட்சம் மருத்துவர்கள் இந்தியாவில் உள்ளனர்.

அதனால், அக்குபஞ்சர் மூலமாக சிகிச்சை அளிக்க முடியும் என்பதை இந்திய மருத்துவ அறிவயல் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் ஆங்கில மருத்துவத்துடன் நோயாளிகளிக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்”.

இது விசாரித்த நீதிபதிகள் மூன்று வார காலத்திற்க்குள் இது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

author avatar
Parthipan K