வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளீர்களா:? வட்டி தள்ளுபடி!! எஸ்பிஐ-யின் அதிரடி அறிவிப்பு!

0
69

வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளீர்களா:? வட்டி தள்ளுபடி!! எஸ்பிஐ-யின் அதிரடி அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ஓர் சலுகையை அறிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கியில் வீட்டு கடன் பெற்றவர்களுக்கு அக்டோபர் 4-ம் தேதியிலிருந்து ஜனவரி 31ஆம் தேதி வரை வட்டி விகிதத்தில் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது.அதாவது தீபாவளி பண்டிகை முன்னிட்டு 0.15% முதல் 0.30% வட்டி சலுகையை அறிவித்துள்ளது.சாதாரணமாக எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன்களுக்கு 8.55% முதல் 9.05% வரை வட்டி விதிக்கின்றன.

தற்போது தீபாவளி சலுகையின் கீழ் வீட்டுக் கடன்களுக்கு 8.40 முதல் 9.05% வரை வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது எஸ்பிஐ வங்கி.இது மட்டுமல்லாமல் வீட்டு கடன்களுக்கான ப்ராசசிங் கட்டணத்தையும் தள்ளுபடி செய்துள்ளது எஸ்பிஐ.

ஆனால் இந்த வட்டி சலுகையே பெற வேண்டும் எனில் உங்கள் சிபில் ஸ்கோர்(CIBIL score) நல்ல அளவில் இருக்க வேண்டும்.அதாவது உங்கள் சிபில் ஸ்கோர் 800க்கு மேல் அல்லது 750 முதல் 799 வரை இருந்தால் இந்த வட்டி சலுகை பயன்படுத்திக் கொள்ளலாம்.அதாவது சிபில் ஸ்கோரை வைத்து வீட்டு கடனுக்கான வட்டி விகிதமும் தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Pavithra