ஆரோக்கியமான தீபாவளி!!பாசிப் பருப்பு முறுக்கு! 

0
132

ஆரோக்கியமான தீபாவளி!!பாசிப் பருப்பு முறுக்கு!

தீபாளியை நம் அனைவரும் ஆரோக்கியமாகவும் சுவையானதாகவும் கொண்டாட வேண்டும் அதற்காக ஒரு கார வகை பாசிப்பருப்பு முறுக்கு. அதனை எவவாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.

தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு கால் கிலோ, அரிசி மாவு கால் கப், வெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், பெருங்காயப் பொடி மூன்று சிட்டிகை, வெள்ளை எள் ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை :முதலில்   பாசிப்பருப்பை வறுத்து மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும். அதனை சலித்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் அரிசி மாவு, வெண்ணெய், பெருங்காயப் பொடி, வெள்ளை எள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில் பிழிய வேண்டும். முறுக்கு வெந்ததும் பொன்னிறமானது எடுத்து விட வேண்டும்.

author avatar
Parthipan K