ஹேஷ்டேக் சேவையை ரத்து செய்தது நான் இல்லை! எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

ஹேஷ்டேக் சேவையை ரத்து செய்தது நான் இல்லை! எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.அதனை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கையும் மேற்கொண்டார்.மேலும் டுவிட்டரில் புகழ்பெற்றவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை அடையாளம் காணும் வகையில் ப்ளூ டிக் செயல்பட்டு  வந்தது.அந்த ப்ளூ டிக் கணக்கிற்கான கட்டணத்தையும் அதிரடியாக உயர்த்தினார்.

மேலும் முன்னதாக டுவிட்டரில் ப்ளூ டிக் கணக்கு பெறுவது சற்று கடினமாக இருந்த நிலையில் தற்போது சுலபமாக்கப்பட்டது.அதனால் போலி கணக்குகளை பரப்புபவர்கள் ப்ளூ டிக் பயன்படுத்துகின்றனர் என தகவல் வெளியானது அதனை தொடர்ந்து ப்ளூ டிக் சேவையை தற்காலிகமாக நிறுத்தினார்.

மேலும் ப்ளூ டிக் சேவைக்கு ஒவ்வொரு துறைகளுக்கும் ஒவ்வொரு கலர் செக் மார்க் கொண்டுவரப்பட்டது.அதனை டுவிட்டர் குழுவினர் எந்த துறைக்கு எந்த கலர் வழங்கப்படும் என பிரித்து வழங்குவார்கள் என அறிவித்தார்.டுவிட்டரின் பங்களிப்பு அதிகரித்து வருவதினால் கேரக்டர் வரம்பு ஆயிரமாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

மேலும் டுவிட்டரில் அண்மையில் இருந்து வெறுக்கத்தக்க பேச்சு,குழந்தைகள் சித்தரவதை மற்றும் தற்கொலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு ஆலோசனை குழு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.டுவிட்டரில் செயல்பட்டு வரும் ஹேஷ்டேக் சேவையை எலான் மஸ்க் அதிரடியாக நிறுத்தினார் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

இந்நிலையில் எலான்  மஸ்க் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தேர் இஸ் ஹெல்ப் என்கின்ற தற்கொலை தடுப்பு அம்சத்தை ரத்து செய்தது நான் என பரவும் செய்திகள் முற்றிலும் பொய் என கூறியுள்ளார்.

Leave a Comment