அமீர் கான் படத்தைப் பாராட்டிய ஹ்ருத்திக் ரோஷனுக்கு எதிராக ஹேஷ்டேக்!

0
76

அமீர் கான் படத்தைப் பாராட்டிய ஹ்ருத்திக் ரோஷனுக்கு எதிராக ஹேஷ்டேக்!

பாலிவுட் நடிகர் அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை ரிலீஸ் ஆனது. இது 1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்ங்ஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பல விருதுகளை பெற்றுக் குவித்தன,மற்றும் “ஃபாரஸ்ட் கம்ப்” என்ற படத்தில் இது பெரிய அதிகாரபூர்வ தகவலுமாகும்.

கடந்த 3 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது. இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த ஆண்டு வரிசையாக முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அமீர்கான் இந்தியாவில் சகிப்பின்மை அதிகமாகியுள்ளது எனக் கூறியதற்காக இப்போது அவரின் படத்தை புறக்கணிக்கவேண்டும் என சமுகவலைதளங்களில் ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்படுகின்றன. இதற்கு பதிலளித்துள்ள அமீர்கான் “நான் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் படம் வெளியான நிலையில் படத்தைப் பார்த்த சக பாலிவுட் நடிகரான ஹ்ருத்திக் ரோஷன் “லால் சிங் சத்தா திரைப்படத்தை பார்த்தேன். படத்தின் ஆன்மாவை உணர்ந்தேன். நிறைகுறைகள் ஒருபக்கம். அற்புதமான திரைப்படம். திரையரங்குகளுக்கு சென்று படத்தைப் பாருங்கள்” என்று ட்வீட் செய்திருந்தார். அமீர் கான் படத்தைப் பாராட்டியதற்காக இப்போது ஹ்ருத்திக் ரோஷனின் விக்ரம் வேதா படத்தை புறக்கணிப்போம் என ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு பரப்பப் பட்டு வருகிறது.