ஹசன் மிராஸ் புதிய சாதனை!வங்காளதேசம் திரில் வெற்றி!!

ஹசன் மிராஸ் புதிய சாதனை!வங்காளதேசம் திரில் வெற்றி!!

இந்தியா-வங்காளதேசம் இடையேயான 2-வது  ஒருநாள் போட்டியானது ஹசன் மிராஸ் சதத்துடன் வங்காளதேசம் வெற்றிப்பெற்றது.

இந்தியா வங்காளதேசத்தில் 3 ஒருநாள் போட்டிகளில் மிர்பூரில் விளையாடி வருகிறது.இதில் முதலாவது போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி மிர்பூரில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் இந்திய பௌலர்களின் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் திணறியதால் முதல் 6 விக்கெட்டுகள் சரசரவென சரிந்தது.

தள்ளாடிய வங்காளதேசத்தை 7 வது விக்கெட்டுக்கு கரம் கோர்த்து  சேர்ந்த ஆல்-ரவுண்டர்கள் மக்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ் சதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றனர். 7வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்த நிலையில் உமர் மாலிக் பந்து வீச்சில் மக்முதுல்லா 77  ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முந்தைய ஆட்ட ஹீரோவான ஹசன் இந்த ஆட்டத்திலும் கலக்கினார்.பவுண்டரிகள்,சிக்சர்களாக விளாசினார். 8-வது விக்கெட்டுக்கு ஹசனுடன் சேர்ந்த  நசிர் அகமது உம்ரன் பந்தில் தொடர்ந்து 2 பவுண்டரி அடித்தார்.

அடித்து விளையாடிய ஹசனுக்கு கடைசி ஓவரில் சதம் அடிக்க 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷர்துல் தாக்குர் வீசிய பந்தில் 2 சிக்சர்களை தெறிக்கவிட்டதுடன் கடைசி பந்தில் சதம் அடித்து தனது முதல் சதத்தை ஒருநாள் போட்டியில் பதிவு செய்து  ரசிகர்களை குஷிப்படுத்தினார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் வங்காளதேசம் 271 ரன்களை எடுத்தது. ஹசன் 100 ரன்கள் (83 பந்து, 4சிக்சர்,8 பவுண்டரி) நசிம் (18 ரன்கள்) எடுத்து களத்தில் நின்றனர்.

இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர்3 ,சிராஜ்,உம்ரான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.அடுத்து 272 என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின்  கோலி(5)-தவான் ஜோடி அதிர்ச்சி அளித்தது.

பின்னர் வந்த சுந்தர்(11),ராகுல்(14) ரன்னில் வெளியற அடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர்,அக்சர் படேல் அணி நிலைத்து அரைசதம் கடந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்தநிலையில் ஸ்ரேயாஸ்(82) வெளியேறினார். அக்சர்(56) ரன்னில் வெளியேற அடுத்த வந்த வீரர்கள் சீட்டுக்கட்டு போல் அடுத்ததடுத்து சரிந்தனர். கேப்டன் ரோகித் சர்மா மட்டும் அரைசதம் கடந்து இறுதி வரை களத்தில் இருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. வங்காளதேச அணி சார்பில் எபாதத் 3, மெஹிதி,சாஹிப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மெஹிதி ஹசன் இந்த போட்டியின் மூலம் புதிய சாதனையை படைத்தார். இவர் 8-வது வரிசையில் களம் இறங்கி சதம் அடித்துள்ளார். 8 அதற்கு கீழ் இறங்கி சதம் அடிப்பது ஒருநாள் போட்டி வரலாற்றில் இது 2-வது தடவை. இதற்கு முன்னர் அயர்லாந்து வீரர் சிமி சங் இந்த சாதனையை புரிந்தார். இந்தியா  வங்க மண்ணில் 2 -வது முறையாக தொடரை தவற விட்டுள்ளது.

Leave a Comment