தீட்சிதர்களுக்கு என்று ஆளுநர் தனியாக சட்டம் வகுத்துள்ளாரா? அமைச்சர் சேகர்பாபு பேட்டி

0
171
#image_title

தீட்சிதர்களுக்கு என்று ஆளுநர் தனியாக சட்டம் வகுத்துள்ளாரா? அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சிதம்பரத்தில் இரட்டை விரல் பரிசோதனை நடைபெறவில்லை. தீட்சிதர்களுக்கு என்று ஆளுநர் தனியாக சட்டம் வகுத்துள்ளாரா? ஆளுநர் என்ன ஆண்டவரா? நிர்பந்தம் காரணமாக பொய் குற்றச்சாட்டுகளை சொல்கிறார் அமைச்சர் சேகர்பாபு பேட்டி.

சென்னையில் வில்லிவாக்கம் மற்றும் ஸ்டீபன் சாலை பகுதியில் நடைபெற்று வரும் சாலை மேம்பால பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். அப்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது.

அறநிலையத்துறைக்கு கார் வாங்கப்பட்டதில் விதிமீறல் நடந்துள்ளதாக கூறிய அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சேகர்பாபு கர்நாடகாவில் வெயில் அதிகமாக இருப்பதால் அண்ணாமலை திக்கு முக்காடி வருகிறார். அதனால் எதாவது குற்றச்சாட்டை சொல்கிறார்.

அமைச்சரான பிறகு ஒரு வாகனத்தைக் கூட சொந்த பயன்பாட்டுக்கு எடுக்கவில்லை. அதிகாரிகளையும் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியது கிடையாது. கார் வாங்கியதில் எந்த தவறும் நடக்கவில்லை கோவில் நிர்வாக வசதிக்காக கார் வாங்கப்பட்டுள்ளது.கார் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதா ? ஊழல் எதுவும் நடக்கவில்லை.

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சி தவறு எங்கு நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் குழந்தை திருமணம் தடை 1930 ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. சிதம்பரத்தில் தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு இரட்டை விரல் பரிசோதனை நடைபெற்றதாக எந்த குறிப்பிடும் இல்லை. சட்டத்துக்கு உட்பட்டு சட்ட ஆலோசகர் மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையும் பெண் மருத்துவர்கள் மூலம் நடத்தப்பட்டுள்ளது.

சட்டம் விதிமீறல் நடந்தால் சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அவர்கள் மீது சட்டம் பாய கூடாதா ? தீட்சிதர்களுக்கு என்று ஆளுநர் தனியாக சட்டம் வகுத்துள்ளாரா ? சட்டம் அனைவருக்கும் பொதுவானது விதிமீறல் இருந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்.தமிழக அரசு புகார்களின் மீது ஆதாரங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆளுநர் என்ன ஆண்டவரா ? ஆட்சி செய்வது மக்களால் தேர்வு செய்யும் அரசு. ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு அரசின் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.மக்கள் பணிகள் நிறைய இருக்கின்றன. ஆளுநர் ஏதோ ஒரு நிர்பந்தம் காரணமாக பொய் குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்.

காலாவதியாக போவது ஆளுநர் தானே தவிர திராவிடம் அல்ல திராவிட மாடல் ஆட்சியை கர்நாடகாவிலும் பாஜக பயன்படுத்தி வருகிறது.நாட்டிற்கு வழிகாட்டியான ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.ஆளுநரும் அவர் சொல்லக்கூடிய இயக்கமும் தான் காலாவதி ஆகுமே தவிர திராவிட மாடல் ஆட்சி அல்ல என்று தெரிவித்தார்.

author avatar
Savitha