தமிழகத்திற்கு இதற்கு தடை நீட்டிப்பா? கொதித்தெழுந்த பாஜகவின் மாநில தலைமை!

0
71

தமிழ்நாட்டில் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருக்கிறது இந்த ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் உடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதனைத்தொடர்ந்து நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு, உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றார்கள்.

இதில் பல முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது, அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் எப்போது திறக்கும் உள்ளிட்ட முடிவுகள் இதில் மேற்கொள்ளப்பட்டது, அதோடு கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு போடப்பட்டிருக்கின்ற தடை நீடிக்கும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அதில் தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து இருக்கின்ற சூழ்நிலையில், தொடர்ச்சியாக கோவில்களில் வழிபாடு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். கர்நாடகா ,கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் நோய்களின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. இந்த வருடத்தின் கடைசியில் நோய்த்தொற்றின் மூன்றாவது அலை ஏற்படும் என்று ஐ சி எம் ஆர் தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்து வருகிறது. இதில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு நேற்றைய தினம் வெளியிட்டிருக்கிறது.

அந்த கூட்டத்தில் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை உணர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது அதேபோல முக்கியமான சமூக அரசியல் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களுக்கு தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பொதுமக்கள் அதிகமாக கூடும் வெள்ளி சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ச்சியாக மூடப்பட்டு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வழிபாட்டு தளங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் எனவும், சொல்லப்பட்டிருக்கிறது நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மருத்துவ வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரின் கருத்துக்களை கேட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றன ஆனால் வழிபாட்டு தலங்களுக்கு மட்டும் தடை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்த விதத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கின்ற பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தொடர்ந்து தடைவிதிக்க வருவதை ஏற்றுக்கொள்ள இயலாது எனவும், டாஸ்மாக் கடைகள் பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி அளித்தது தமிழக அரசு ஆனால் சாமி தரிசனம் செய்யும் அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் தமிழக பாஜகவின் தலைவர்.