உலகம் முழுவதும் இத்தனை கோடி பேருக்கு பரவியுள்ளதா?

0
78
உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில்  கொரோனா வைரஸ்  பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் இந்த வைரஸால் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
author avatar
Parthipan K