ஹர்திக் பாண்டியா கட்டிப்பிடித்து கண்கலங்கிய மனைவி நடாஷா! இறுதிப் போட்டியின் போது நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்!

0
97

கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கிய 15வது ஐபிஎல் தொடர் மே மாதம் 29ஆம் தேதி நேற்று வரையில் நடைபெற்றது இதில் பல முக்கிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் தொடரை விட்டு வெளியேறிய சூழலை காணமுடிந்தது.

சென்ற வருடம் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் எப்படியும் சாம்பியன் பட்டத்தை வென்று விடும் என காத்திருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடையும் விதமாக அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. இது அந்த அணியின் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் அந்த அணி எப்படியும் கோப்பையை வெல்லும் என நினைத்திருந்தார்கள். ஆனால் அவர்களுடைய நினைப்பு கனவாகவே போய்விட்டது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் புதிதாக சில அணிகள் இணைக்கப்பட்டன அதில் ஒரு முக்கியமான அணி குஜராத் டைட்டன்ஸ் அணி.

இந்த நிலையில், மார்ச் மாதம் 26ஆம் தேதி ஆரம்பமான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி ஆமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று நடந்த பிரம்மாண்டமான இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிதாக ஐபிஎல் தொடரில் இணைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

அறிமுக அணியான குஜராத் அணியில் மிகச் சிறப்பாக வழிநடத்திய அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து அசத்தியிருக்கிறார்.

முதல் அணியாக தகுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த குஜராத் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என்று அனைத்திலுமே மிக சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், குஜராத் அணியின் இறுதிப் போட்டியைக் காண ஹர்திக் பாண்டியாவின் மனைவி வந்திருந்தார். குஜராத் அணி வெற்றி பெற்ற பிறகு மைதானத்தில் நின்று கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவை அவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது அவருடைய கண்களில் ஆனந்தக் கண்ணீர் வடிந்த வண்ணமிருந்தது.