37 பந்துகளில் சதம்: 5 மாதத்துக்குப் பின் வானவேடிக்கைக் காட்டிய ஹர்திக் பாண்ட்யா !

0
60

37 பந்துகளில் சதம்: 5 மாதத்துக்குப் பின் வானவேடிக்கைக் காட்டிய ஹர்திக் பாண்ட்யா !

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 37 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார்.

இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தனது அதிரடியான பேட்டிங்காலும், விக்கெட் எடுக்கும் பவுலிங் திறமையாலும் இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக வலம் வந்து கொண்டு இருந்தார். ஆனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக அவருக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருந்தார்.

காயம் ஆறிய பின்னர் இந்திய அணியில் இடம்பெறுவதற்காக பயிற்சியில் ஈடுபட்ட அவர் தற்போது உள்நாட்டு போட்டிகளில் விளையாடி அணியில் இடம்பிடிக்க முயற்சி செய்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக டாக்டர் டி ஒய் படேல் கோப்பையில் ரிலையன்ஸ் -1 அணிக்காக அவர் விளையாடி வருகிறார். இதில் அவர் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தனது திறமையை அவர் நிருபித்துள்ளார்.

முதல் போட்டியில் அவர் களமிறங்கி 20 பந்துகளில் 37 ரன்கள் அடித்தது மட்டும் இல்லாமல், 2 விக்கெட்களையும் கைப்பற்றினார். அதையடுத்து இன்று நடந்த சிஏஜி  அணிக்கு எதிரானப் போட்டியில் 37 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இதில் 10 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் அடக்கம். இந்த அதிரடியான ஆட்டத்தின் மூலம் அவர் தனது உடல்தகுதியை இந்திய தேர்வுக்குழுவுக்கு நிருபித்துள்ளார்.

தென் ஆப்ப்ரிக்க அணி, இந்தியா வந்து ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணியில் பாண்ட்யாவுக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாண்ட்யாவின் இந்த சதம் அதை உறுதிப்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K