பேட்டிங் & பவுலிங்கில் கலக்கிய பாண்ட்யா… இந்தியா த்ரில் வெற்றி!

0
71

பேட்டிங் & பவுலிங்கில் கலக்கிய பாண்ட்யா… இந்தியா த்ரில் வெற்றி!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆசியக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சீரான இடைவெளியில் விக்கெட்களை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தினர். இதனால் ஒரு கட்டத்தில் போட்டி இந்தியாவின் பக்கம் இருந்தது. புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டிய, அர்ஷ்திப் சிங் ஆகியோர் சிறப்பாக வீசினர்.

இதனால் பாகிஸ்தான் அணி தடுமாறியது. கடைசி கட்டத்தில் அந்த அணி பின்கள மட்டையாளர்கள் அதிரடியில் இறங்க 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பில் புவனேஷ்வர் 4 விக்கெட்களும், ஹர்திக் பாண்ட்யா மூன்று விக்கெட்களும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ராகுல் டக் அவுட் ஆகி வெளியேற, அதன் பின்னர் வந்த கோலி கேப்டன் ரோஹித் ஷர்மாவோடு நிதானமாக விளையாடி ரன்களைக் குவித்தார். மறுமுனையில் ரோஹித் ஷர்மா ரன்கள் சேர்க்க முடியாமல் தடுமாறினார். இதையடுத்து ஒரே ஓவரில் ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். கோலி 35 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ்வும் கொஞ்ச நேரத்தில் வெளியேற, ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜடேஜா ஜோடி சிறப்பாக விளையாடி தேவையான போது பவுண்டரிகள் விளாசியது. ஆனால் ஒரு கட்டத்தில் ரன் ரேட் அதிகமாக ஹர்திக் பாண்ட்யா அதிரடியில் புகுந்தார். கடைசி ஓவரில் ஜடேஜா அவுட் ஆகி வெளியேற, ஹர்திக் பாண்ட்யா சிக்ஸர் விளாசி போட்டியை முடித்தார். இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here