பெற்ற மகளிடமே இச்சையைத் தீர்த்துக் கொண்ட துணை தாசில்தார்! போக்சோ நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

0
114

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தவர் மனைவி இறந்து விட்ட சூழ்நிலையில், கடந்த 2019ஆம் வருடம் முதல் 10 வயது மகளுடன் வசித்து வந்திருக்கிறார்.

பள்ளியில் கல்வி பயின்று வந்த அந்த சிறுமி நாள்தோறும் பள்ளிக்கு வந்த போது சோர்வாக காணப்படுகிறார். இதனை கவனித்த ஆசிரியை சிறுமியை தனியாக அழைத்து உரையாடியிருக்கின்றார் .

அப்போது அவருடைய தந்தை நாள்தோறும் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மாணவி தெரிவித்திருக்கிறார். இதனை கேட்ட ஆசிரியை அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதுதொடர்பாக பாங்கோடு காவல் நிலையத்தில் அவர் புகார் வழங்கினார்.

இந்த புகாரினடிப்படையில். விசாரணை நடத்திய காவல் துறையைச் சார்ந்தவர்கள் துணை தாசில்தார் கைது செய்து வழக்கு தொடர்ந்தார்கள். திருவனந்தபுரம் போக்சோ நீதிமன்ற நீதிபதி வழக்கை விசாரித்து துணை தாசில்தாருக்கு 17 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

அதோடு 16.5 லட்சம் அபராதமும் விதித்த நீதிபதி அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். அபராத தொகையை சிறுமியின் எதிர்காலத் தேவைக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.