அனைவருக்கும் ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்!! ஏன் ராக்கி கட்டப்படுகிறது?

0
89

அனைவருக்கும் ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்

ரக்க்ஷா பந்தன் என்பது ஆவணி மாதம் வரும் பவுர்ணமி நாளில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

பெண்கள் யார் யாரை தன் சகோதரர்கள் என்று எண்ணுகிறார்களோ அவர்கள் கையில் ஒரு மஞ்சள் நூல் அல்லது வண்ண கயிறு கட்டி சகோதரனாக ஏற்றுக் கொள்வர்.

இவ்வாறு அந்த சகோதரர் ஏற்றுக் கொள்வதன் மூலம் தங்கையின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் போராடுவேன் என்று உறுதி மொழியாக எடுப்பதாக கருதபடுகிறது.

ராக்கி கட்டி முடித்ததும்ச தனது அன்பு சகோதரிக்கு பரிசு ஒன்றை வழங்கவேண்டும். இது ஒரு முறையாகும்.

ஏன் ராக்கி கட்டப்படுகிறது?

மகாபாரதத்தில் போர் செய்து கொண்டிருக்கும்பொழுது கிருஷ்ணருக்கு அடிபட்டு விட்டதால் அப்பொழுது பாண்டவர்களின் மனைவியான திரௌபதி தன் புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து அவருக்கு அந்த காயத்திற்கு கட்டு போட்டாராம். அந்த நிகழ்வு கிருஷ்ணனின் ஆழ் மனதைத் தொட்டதால் அவர் திரௌபதியைத் தனது தங்கையாக ஏற்று அவருக்கு எந்த பிரச்சினை வந்தாலும் காப்பேன் என்று உறுதி அளித்திருக்கிறார். இந்த நிகழ்வு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திரௌபதி துகிலுரியப்பட்ட போது கூட கிருஷ்ணன் உதவி செய்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. கிருஷ்ணனின் காயங்களுக்கு திரௌபதி தன் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே ரக்சா பந்தன்.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் இனிய ரக்சா பந்தன் நல்வாழ்த்துக்கள்

author avatar
Kowsalya