பயனர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்! வாட்ஸ் அப்பில் இனி இதுவும் செய்ய முடியுமா?

0
191
Happy news for users! Can WhatsApp do this anymore?
Happy news for users! Can WhatsApp do this anymore?

பயனர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்! வாட்ஸ் அப்பில் இனி இதுவும் செய்ய முடியுமா?

உலகில் அதிக அளவு மக்கள் பயன்படுத்தும் செயலிகளில்  ஒன்றாக இருப்பது வாட்ஸ் அப். இந்த  நிறுவனம் பயனர்களை கவரும் வகையில் புதுப்புது அப்டேட்டுகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. தனிப்பட்ட வேலைகளுக்கும், அலுவலகம் சார்ந்த வேலைகளுக்கும் வாட்ஸ் அப் சிறந்த செயலியாக உள்ளது.

அதனால் வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த வகையில் தற்போது வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்டஸாக வைக்கும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. முன்னதாக வாட்ஸ் அப்பில் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை ஸ்டேட்டஸாக வைக்க முடியும். வீடியோக்கள் அதிகபட்சமாக 30 நிமிடங்கள் மட்டுமே ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும்.

இந்த வீடியோ ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்தில் தானாகவே டெலிட் ஆகிவிடும். அதுபோலவே இனி வாய்ஸ் நோட்டுகளையும் 30 வினாடிகள் ஸ்டேட்டஸ் சாக வைக்க புதிய அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சமானது பயனர்களுக்கு பயன்பாட்டிற்கு வந்துள்ளது அதனுடன் இந்த வாய்ஸ் மெசேஜ் ஸ்டேட்டஸ்  யார் பார்க்க வேண்டும் என்பதையும் பயனர்கள்  நிர்வகித்து கொள்ளும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

author avatar
Parthipan K