காவல் துறையினருக்கு ஹேப்பி நியூஸ்!! காவலர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி!! இனிமே ஜாலிதான்!!

0
107
Happy news for the police !! Relatives of the guards are happy !! It's fun now !!
Happy news for the police !! Relatives of the guards are happy !! It's fun now !!

காவல் துறையினருக்கு ஹேப்பி நியூஸ்!! காவலர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி!! இனிமே ஜாலிதான்!!

காவல்துறையில் பணிபுரிவோருக்கு எந்த ஒரு விடுப்பும் வழங்கப்படாது என்பது எல்லாரும் அறிந்தவையே அவர்களுக்கு வாராந்திர விடுப்பு மற்றும் பண்டிகை விடுப்பு போன்ற எந்த ஒரு விடுப்பும் இதுவரை வழங்கப்பட்டது இல்லை. மேலும் வருடத்தின் மொத்த நாட்களுமே காவல்துறையினர் பணிபுரிவதால் அவர்களின் உடல் நலமும் மன நலமும் மிகவும் பாதிக்கப்படுகிறது என்று ஆய்வில் தெரிய வந்தது. இதனை பெரிதும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, காவலர்களின் உடல்நலம் மற்றும் மனநலம் குறித்து தற்போது ஒரு முடிவு அமல்ப்படுத்தி உள்ளது. அதன்படி தமிழ்நாடு காவல்துறையினர் அனைவருக்கும் வாராந்திர விடுமுறை அளிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். இதன்படி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து காவலர்களுக்கும் வாராந்திர விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் காவலர்கள் தங்களின் பிறந்தநாள் மற்றும் திருமண ஆண்டு விழாவில் விடுப்பு எடுத்துக் கொள்ள உரிமை உண்டு என்று கூறினார். இது குறித்து அவர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த சுற்றறிக்கையில், அவர் கூறியதாவது: தனது உடன் பணிபுரியும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் வாராந்திர விடுமுறை வழங்கப்படும். மேலும், பிறந்தநாள் மற்றும் திருமண ஆண்டு விழாவில் விடுப்பு எடுத்துக் கொள்ள அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாராந்திர விடுமுறை கட்டாயம் ஆக்கப்படுவது காவல்துறையினரின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். மேலும் அவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் நாள் முழுவதும் செலவழிக்க முடியும் என்பதற்காகத்தான். மாநில குற்றப்பதிவு பணியகத்தின் புள்ளிவிவரங்களின்படி குறைந்தது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர்.  தற்போது ஒரு ஒரு காவல்துறையினரும் வாராந்திர விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் அவர்கள் வாராந்திர விடுமுறை நாட்களில் பணி புரிய நேர்ந்தால் அவர்களுக்கு கூடுதல் கடமைக்கான ஊக்கத் தொகையை பெற உரிமை உள்ளது.

காவல்துறை அதிகாரிகள் கிடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளில் இதுவும் ஒன்றாகும். பல ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் இந்த முடிவை பெரிதும் பாராட்டினர். மேலும் காவல்துறையினரின் இல்ல திணறும் இந்த விடுப்பு அறிவிப்பை பெரிதும் வரவேற்றனர். இதுகுறித்து தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் கூறுகையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார். 1987ஆம் ஆண்டு கோபிசெட்டிபாளையத்தில் காவல் உதவி கண்காணிப்பாளராக காவல்துறையில் சேர்ந்த இவர் இப்போது உயர் நிலையை அடைந்துள்ளார். அவர் தனது அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையின் மூலம் இந்த இடத்தை பெற்றுள்ளார், என்று முதல்வர் அவரைப் பாராட்டினார்.

author avatar
Preethi