மூத்த குடிமக்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இனி மாதம் ரூ 20,000 பெறலாம்!

0
152
Happy news for senior citizens! Now you can get Rs 20,000 per month!
Happy news for senior citizens! Now you can get Rs 20,000 per month!

மூத்த குடிமக்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இனி மாதம் ரூ 20,000 பெறலாம்!

2023 24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்கப்படுவதுடன் மிகப்பெரிய அறிவிப்பையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்

அந்த அறிவிப்பின்படி மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் அதிகபட்ச முதலீடாக 30 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வரம்பு 15 லட்சமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தின் வட்டி விகிதம் அரசால் 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்திற்கு முன்பு இந்த அரசாங்க திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி விகிதம் கிடைத்தது. அதிகபட்ச முதலீட்டு வரம்பில் அதிகரிப்பு மற்றும் வருடாந்திர வட்டி விகிதத்தில் அதிகரிப்பதன் மூலமாக மூத்த குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் வட்டி வடிவில் சம்பாதிக்கும் வருமானம் முன்பை விட இரட்டிப்பாகும்.

முன்னதாக இந்த திட்டத்தில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்து 7.6 சதவீத விகிதத்தில் முதிர்வு நேரத்தில் 12 லட்சம் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு 1.14 லட்சம் மற்றும் மாதம் 9.5 ஆயிரம் ஆகும். ஆனால் முதலீட்டு வரம்பு மற்றும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டதால் ரூ 30 லட்சத்தை டெபாசிட் செய்தால் ஐந்து வருட முதிர்வு காலத்தில் ரூ.12 லட்சம் வட்டியுடன் மொத்தம் 42 லட்சம் கிடைக்கும்.

மேலும் ஆண்டு அடிப்படையில் 2.4 லட்ச ரூபாயாகவும் மாத அடிப்படையில் 20 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. முந்தைய 9.5 ஆயிரம் ரூபாயுடன் ஒப்பிடுகையில் இப்போது மூத்த குடிமக்கள் 20 ஆயிரம் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K