மூத்த குடிமக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்! ரயில்களில் விரைவில் அமலுக்கு வரும் புதிய வசதி?

0
325
Happy news for senior citizens! New facility coming soon in trains?
Happy news for senior citizens! New facility coming soon in trains?

மூத்த குடிமக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்! ரயில்களில் விரைவில் அமலுக்கு வரும் புதிய வசதி?

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல்  குறைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் தொடங்கியது. இருப்பினும் குழந்தைகள் மட்டும் மூத்த குடிமக்கள் பயணம் செய்ய அதிகளவு ஆர்வம் காட்டாமல்  இருந்தனர். அதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ரயில் கட்டணத்தில் எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாமல் இருந்தது.

மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற மக்களவை சுயாட்சி உறுப்பினர் நவநீத் மீண்டும் எப்போது ரயிலில் கட்டண சலுகை வழங்கப்படும் என கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது அவர் கூறுகையில் பயணிகள் தேவைக்காக ரயில்வே ரூம் 59 ஆயிரம் கோடி மானியம் வழங்கியுள்ளது. இந்த தொகையானது  சில மாநிலங்களின் வருடாந்திர பட்ஜெட் தொகையை விட பெரியது என கூறினார்.

மேலும் வந்தே பாரத் ரயில்கள் இருக்கை வசதியுடன் அதிகபட்சம் 500 அல்லது 550 கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. படுக்கை வசதி அமலுக்கு வந்த பிறகு நீண்ட தூரத்திற்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடித்த பிறகு நாட்டின் மூலை  முடுக்குகளில் எல்லாம் அயோத்தியுடன் ரயில்கள் மூலம் இணைக்கப்படும்.

பெரிய ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு பணி நடந்து வருகின்றது எனக் கூறினார்.மேலும் இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் மற்ற போக்குவரத்துகளை விட ரயில் பயணத்தை விரும்புகின்றனர். அதனால் ரயில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம் பெரும்பாலானோர்  நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணம் மிகவும் வசதியாக இருக்கும் என்பதால் ரயில் பயணத்தை தான் விரும்புகின்றனர்.

ரயில் பயணத்தில் கொரோனா காலத்திற்கு  முன்பு வரை மூத்த குடிமக்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா காட்டலத்திற்கு பிறகு மூத்த குடிமக்களுக்கு எந்த ஒரு சலுகையும் வழங்கப்படவில்லை. இந்தியாவில் ரயிலில் ஏசி மற்றும் இரண்டாம் வகுப்புகளை தவிர்த்து மற்ற அனைத்து பெட்டிகளிலும் மூத்த குடிமக்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை சலுகை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அந்த சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என மத்திய நிலை குழு இந்திய ரயில்வேக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதனால் விரைவில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயிலில் சலுகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

author avatar
Parthipan K