அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! அகவிலைப்படி இத்தனை சதவீதம் உயர்வா?

0
251
Happy news for government employees! How much percent increase in cost price?
Happy news for government employees! How much percent increase in cost price?

அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! அகவிலைப்படி இத்தனை சதவீதம் உயர்வா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு இம்மாதத்தில் மிகப்பெரிய மகிழ்ச்சி செய்தி கிடைக்க உள்ளது. அந்த வகையில் அரசு விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்வு குறித்து முடிவு எடுக்க உள்ளது என கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து அமைச்சரவையில் ஹோலி பண்டிகைக்கு முன்னதாகவே முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் மிகப்பெரிய முடிவை தொடர்ந்து அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் கிட்டதட்ட நான்கு சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு 38 சதவீத  அகவிலைப்படியை வழங்கி வருகின்றது. ஊழியர்கள் எதிர்பார்த்தபடியே  அரசு அகவிலைப்படையை உயர்த்தும் பட்சத்தில் அரசு ஊழியர்களின் மொத்த அகலப்படி 42 சதவீதமாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்த உயர்வின் வாயிலாக ஒரு கோடிக்கு அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

ஆனால் அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் கிடைக்கவில்லை எனவும் அதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி வழங்கியது.

நிலையில் தற்போது வரை அதற்கான எந்த ஒரு அறிவிப்பு வெளியாகவில்லை என அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K