மீனவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

0
112
Happy news for fishermen! The order issued by the Supreme Court!
Happy news for fishermen! The order issued by the Supreme Court!

மீனவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

கடந்த 2000 ஆம் ஆண்டு தமிழக அரசு தடை ஆணை ஒன்றை பிறபித்தது.அந்த உத்தரவில் தமிழ்நாட்டின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஐந்து நாட்டிக்கல் மைல் எல்லை பகுதிக்குள் மீனவர்கள்  சுருக்குமடி வலைகளை பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டது.அதன் காரணமாக இந்த சுருக்குமடி வலைகளால் அரிய உயிரினங்களும்,பவளப்பாறைகள் உள்ளிட்டவை அனைத்தும் அரித்து செல்லப்படுகிறது.

அதனால் தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் பாரம்பரிய மீன்பிடிக்கக்கூடிய மீனவர்களுக்கும்,இதனால் பெரும் பாதிப்பு உருவாகிறது என தமிழக அரசின் வாதமாக உள்ளது.இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் தமிழ்நாடு அரசின் முடிவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

மேலும் இதனை எதிர்த்து மீனவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவிற்கு தமிழக அரசு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.அதில் தமிழக அரசுக்கு மட்டும் தான் முழு அதிகாரம் உள்ளது என கூறியுள்ளனர்.மத்திய அரசும் அதே மாதிரியான தகவலை கூறியுள்ள நிலையில் இன்று அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பில் கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு சுருக்கும்படி வலைகளை பயன்படுத்துவதற்கு தற்போது உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.அந்த வகையில் வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே மீன்பிடிக்க சுருக்கும்படி வலைகளை பயன்படுத்த வேண்டும்.அந்த இரண்டு நாட்களும் காலை ஆறு மணி முதல் மாலை எட்டு மணி வரை மட்டுமே இந்த வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு அரசின் கீழ் பதிவு செய்யப்பட்ட படகுகளில் மட்டுமே இந்த வலைகளை எடுத்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி அந்த படகுகளில் ஜிபிஎஸ் ட்ராக்கிங் கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.மீனவர்கள் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K