மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இந்த தேதியில் கண்டிப்பாக அகவிலைப்படி உயர்வு?

0
200
Happy news for central government employees! Definitely increase in discount rate on this date?
Happy news for central government employees! Definitely increase in discount rate on this date?

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இந்த தேதியில் கண்டிப்பாக அகவிலைப்படி உயர்வு?

மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் விலைவாசி உயர்வை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஓராண்டுக்கு இரண்டு முறை உயர்த்தி வழங்கப்படுகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக வழங்கப்பட்டது.

மேலும் கோடிக்கணக்கான பணியாளர்களும் , ஓய்வூதியதாரர்களும் 38 சதவீதம் அகவிலைப்படியை  பெற தகுதி பெற்றனர். இந்நிலையில் மத்திய அரசு அடுத்த சில தினங்களில் அகவிலைப்படி  மற்றும்அகவிலை  நிவாரணம் உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படியானது வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஹோலி பண்டிகைக்கு பின்பு லட்சக்கணக்கான ஊழியர்களுக்கான அகவிலைப்படியை  38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாகவும், பிட்மென் காரணிகளையும் உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படையும் அதோடு பே மேட்ரிக்ஸ் அளவை பொறுத்து ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வானது மாறுபடும். வரும் மார்ச் 8 ஆம் தேதிக்குப் பிறகு அகவிலைப்படி மட்டும் பிட்மென்ட் காரணியை திருத்த அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K