ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம்… மாப்பிள்ளை பற்றி வெளியான தகவல்!

0
89

ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம்… மாப்பிள்ளை பற்றி வெளியான தகவல்!

நடிகை ஹன்சிகா 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வந்தவர்தான் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயனத்தை ஆரம்பித்த இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத்  இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான தேசமுருடு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் இரண்டு இந்தி படங்களிலும் கதாநாயகியாக நடித்தார்.

இவர் தமிழில் 2011ஆம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான எங்கேயும் காதல் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் திரையில் முதலில் வெளியானது அதே வருடம் தனுஷ் ஜோடியாக இவர் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் தான். அதன்பிறகு தமிழில் அவர் ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, வேலாயுதம், தீயா வேலை செய்யனும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, அரண்மனை 2 ,ரோமியோ ஜூலியட், போகன் உள்ளிட்ட நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பெரியளவில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மஹா திரைப்படமும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஹன்சிகா தற்போது திருமண முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மணமுடிக்க உள்ள நபர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் அரசியல் பின்புலத்தை சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here