Connect with us

Breaking News

அறுந்து தொங்கிய மின்கம்பி! தந்தை மற்றும் மகனின் உயிருக்கு உலை வைத்த கொடூரம்! 

Published

on

அறுந்து தொங்கிய மின்கம்பி! தந்தை மற்றும் மகனின் உயிருக்கு உலை வைத்த கொடூரம்! 

மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருந்த பொழுது தொங்கிய மின்கம்பியால் தந்தை மகன் இருவரும் உடல் கருகி பலியானார்கள்.

Advertisement

தண்ணீர் கேன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் தந்தை மகன் இருவரும் சென்று கொண்டிருந்த பொழுது அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து தந்தை மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நெஞ்சை உறைய வைக்கும் இந்த சம்பவம் மாமல்லபுரத்தில் நடந்துள்ளது.

மாமல்லபுரம் அருகே உள்ள வடகடம்பாடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டன் வயது 42.  இவர், திருப்போரூர் அடுத்துள்ள ஆலத்தூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருடைய மகன் ஹேமநாதன் வயது 10. இவன் மாமல்லபுரத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். 

Advertisement

நேற்று கோதண்டன் தனது மகனுடன் தண்ணீர் கேன் வாங்குவதற்காக தனது வீட்டில் இருந்து  மெயின் ரோட்டில் உள்ள கடைக்கு வயல்வெளியில் உள்ள சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் உயர்அழுத்த மின் கம்பியானது சுமார் 4 அடி உயரத்தில் அறுந்து தொங்கிய நிலையில் கிடந்தது. 

இதையடுத்து அதை கவனிக்காமல் அந்த வழியாக  சாலையை கடந்து போகும்போது மோட்டார் சைக்கிளில் வந்த கோதண்டன், ஹேமநாதன் இருவர் மீதும் மின் கம்பி உரசியது. இதில் இருவரும் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே தந்தை மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மின்வாரியத்துறைக்கு தகவல் அளிக்கவே உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்கம்பியில் சிக்கி இருந்த இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன. சம்பவம் நடந்த இடத்திற்கு தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement