கட்சி அலுவலகத்திலேயே பெண் உறுப்பினர் தூக்கு! தற்கொலை கடிதத்தால் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

0
68

ஒரே அலுவலகத்தில் சக கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் டார்ச்சர் செய்ததால், கட்சியின் பெண் தொண்டர் ஒருவர் கடிதம் எழுதிவிட்டு கட்சி அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் பாரசாலா அருகேயுள்ள உதயங்குளக்காரா பகுதியை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவரது மனைவி ஆஷா (வயது 41). இவர் மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவும், கட்சிப் பணியில் தொண்டு செய்தும் வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை கட்சி அலுவலகம் செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

 

அதற்குப்பிறகு அவர் வீடு திரும்பாததால், கணவர் மற்றும் அவரது உறவினர்கள் கட்சி அலுவலகம் சென்று பார்த்த போது, கட்சி அலுவலகத்தில் உள்ள அறையில் அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

 

அவரின் தற்கொலைக்கு முன் ஆஷா எழுதி வைத்துள்ள கடிதத்தில், “உள்ளுர் தலைவர்கள் ராஜன், ஜாய் ஆகியோர் என்னை தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகின்றனர். மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன். என்னை டார்ச்சர் செய்வது குறித்து கட்சியின் மேல்மட்டத் தலைவர்களுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Hang female member in party office The incident caused a stir by the suicide note
Hang female member in party office! The incident caused a stir by the suicide note

இதையடுத்து, ஆஷாவின் உடலை தூக்கில் இருந்து கீழே இறக்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, காவல்துறையினர் சமாதானப்படுத்தி சடலத்தை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

இந்த சம்பவத்தை அடுத்து, கேரளாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், ரமேஷ் சென்னிதாலா கூறுகையில், ” நேர்மையான டி.ஜி.பி ஒருவரை வைத்து இந்த வழக்கை விசாரித்து உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வர வேண்டும்.

 

மார்க்சிஸ்ட் கட்சிக்குள் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி பெண் தொண்டர்கள் குறி வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

 

தற்கொலை செய்து கொண்ட பெண் தன் நிலை குறித்து மேல் மட்டத் தலைவர்களுக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

கட்சி அலுவலகத்திலேயே மார்க்சிஸ்ட் கட்சியின் பெண் தொண்டர் தற்கொலை செய்து கொண்டிருப்பது கேரளாவில் பொதுமக்களிடையேயும், கேரள அரசியல் வட்டாரங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Parthipan K