குரூப் 4 மெயின்ஸ் இப்படி தான் இருக்கும் டிஎன்பிஎஸ்சி விளக்கம்.

0
74

குரூப் 4 மெயின்ஸ் இப்படி தான் இருக்கும் டிஎன்பிஎஸ்சி விளக்கம்.

சமீபத்தில் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ள விடயம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேடுகள்.இதில் சாதாரன இளநிலை உதவியாளர் தேர்வு முதல் துணை ஆட்சியர் தேர்வு வரை எல்லா நிலைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதும் அதன் மூலம் தகுதியற்ற நபர்கள் அரசு ஊழியர்களாக தேர்வு செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.இதற்கிடையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இரண்டு வாரங்களுக்கு முன்பு பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தது.அதில் அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும்,ஆதார் கார்டு எண் தெரிவிக்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன.

இருந்தபோதிலும் அதில் அறிவிக்கப்பட்ட முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்பட்டது குரூப்-4 தேர்வுக்கு முதல் நிலை மற்றும் முதன்மை என இரண்டு நிலைகளாக தேர்வு நடைபெரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு தேர்வர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.காரணம் முதல்நிலை தேர்வு மட்டுமே உள்ள நிலையில் அவர்கள் தாங்களாகவே தேர்வுக்கு தயார் செய்ய இயலும்.ஆனால் முதன்மை தேர்வு இருக்கும் பட்சத்தில் அவர்கள் பிரத்தியேகமான பயிற்சி மையங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர் என அச்சப்படப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத் தலைவரிடம் கேட்டபோது அவர் கூறிய பதிலானது: முதன்மை தேர்வு மட்டுமே நடத்தப்படும் பட்சத்தில் தேர்வர்கள் மனப்பாடம் செய்யும் திறன் மட்டுமே பெற்று தேர்ச்சி பெற்று வேலைக்கு வருகின்றனர்.

அவ்வாறு வருபவர்கள் கடிதம் எழுதுதல் முறையான வழியில் பதில் அளித்தல் அறிக்கை தயாரித்தல் போன்ற அடிப்படை தகுதிகள் கூட இல்லாமல் இருப்பதாலேயே இந்த முறைக்கு மாற்றப்பட்டதாகவும், மேலும் முதன்மை தேர்வு என்பது சுருக்கி எழுதுதல் விவரித்து எழுதுதல் பத்தியை படித்து விடையளித்தல் போன்றவை மட்டுமே இடம்பெரும் எனவும் தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசில் இதே பத்தாம் வகுப்பு தகுதிக்கு நடைபெரும் தேர்வில் முதல்நிலைத் தேர்வு முதன்மை தேர்வு தட்டச்சு தேர்வு என பல்வேறு நிலைகளில் நடைபெருகிறது.அந்த அளவிற்கான நெருக்கடியை தேர்வர்கள் மீது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் காட்டவில்லை எனவும் தெரிவித்தார்.

author avatar
Parthipan K