வறட்டு இருமல், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு பச்சை திராட்சை யா!!

0
97
#image_title

வறட்டு இருமல், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு பச்சை திராட்சை யா!!

திராட்சை எல்லோருக்கும் பிடித்த பழமாக இருக்கும். இதில் கருப்பு மற்றும் பச்சை என இருவகை திராட்சை உள்ளன. உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை ஏற்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்து ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் விட்டமின்கள் அதிகமாக உள்ளன.

கொலஸ்ட்ரால் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்க பச்சை திராட்சை உதவுகிறது. ஒரு கை அளவிற்கு சாப்பிட்டு உடலில் இருக்கும் உட்பொருள் கொலஸ்ட்ராலை கரைத்து உடல் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

திராட்சையில் இரும்பு சத்து, காப்பர், மெக்னீசியம் அதிகமாக இருப்பதால் எலும்புகளின் வலிமைக்கும், உருவாக்கத்திற்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் வளமாக இருக்கும். விட்டமின் ஏ மற்றும் சி இதில் இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. விட்டமின் சி ஈறுகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை இன்றியமையாத ஒன்றாகும்.

திராட்சை நுரையீரலில் உள்ள ஈரப்பசையை அதிகரித்து வறட்டு இருமல் வராமல் தடுக்கும். சுவாசிப்பதற்கு சிரமப்படுவர்கள் பச்சை திராட்சையை தினமும் சாப்பிடலாம். மேலும் ஆஸ்துமா பிரச்சனையிலுருந்து விடுபட பெரிதும் வழி வகுக்கிறது .

தினமும் சிறிது பச்சை திராட்சை உட்கொள்வதால் செரிமான பிரச்சனைகள் மற்றும் வயிறு எரிச்சல் போன்ற பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும். இவ்வளவு நன்மைகள் உள்ள திராட்சைகளை உட்கொண்டு ஆரோக்கியத்தை பெற்று மகிழுங்கள்.

 

 

author avatar
Selvarani