பிரிவினைவாத தலைவரின் பேரன் பதவியில் இருந்து நீக்கம்! காரணம் இதுதானாம்!

0
82
Grandson of separatist leader fired! This is the reason!
Grandson of separatist leader fired! This is the reason!

பிரிவினைவாத தலைவரின் பேரன் பதவியில் இருந்து நீக்கம்! காரணம் இதுதானாம்!

மறைந்த பிரிவினைவாத தலைவர் சையத் அலி கிலானி. அவரது பேரன் அனீஸ் உல் இஸ்லாம். இவர் அரசு வேலையில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளார். அதற்கு காரணம் அவர் பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பெயரில் அவர் அரசு வேலையிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 6 மாதங்களில் மட்டும் ஜம்மு-காஷ்மீரில் அரசு பதவி நீக்கம் செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அவர் செய்த குற்றச்சாட்டுகளான  பயங்கரவாதிகளுக்கு உதவி புரிந்தது, தற்போது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் அனுமதியின் பேரில் நான்கு பேரும் அரசியல் அமைப்புச் சட்டம் 311(2)(சி) பிரிவின் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அங்கு ஒரு தீர்மானம் உள்ளது. இந்த சட்டப் பிரிவுகளின் கீழ் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஐகோர்ட்டில் மட்டுமே ஊழியர்கள் முறையிட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.