எஸ்சி மற்றும் எஸ்டி இளைஞர்களுக்கு அரசின் சூப்பர் சலுகை!! உடனே அப்ளை செய்யலாம்!!

0
111
Govt super offer for SC, ST youth!! Apply now!!
Govt super offer for SC, ST youth!! Apply now!!

எஸ்சி மற்றும் எஸ்டி இளைஞர்களுக்கு அரசின் சூப்பர் சலுகை!! உடனே அப்ளை செய்யலாம்!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இளைஞர்களுக்கு நிதிசார்ந்த
தொழிற்பயிற்சி அளிப்பதால் எஸ்சி, எஸ்டி இளைஞர்கள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு
அறிவித்துள்ளது. இது பற்றிய செய்தி குறிப்பில் உள்ளதாவது,
தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினருக்கான கல்வி,சுகாதாரம், மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் அனைத்து
திட்டங்களும் மத்திய மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் மாவட்ட அளவில் உள்ள
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் பின்தங்கிய ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர்
கல்வி,மேம்பாட்டிற்கும் பொருளாதரத்தில் பின் தங்கியவர்களின் முன்னேற்றத்திற்கும் பல
திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயல்படுத்தி வருகிறது.இதற்காக தாட்கோ-வில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பித்து உரிய பயன்களை பெறலாம்.

அனைத்து மாவட்டங்களிலும் தாட்கோ அலுவலகங்கள் உள்ளன.ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை தாட்கோ வழங்கி வருகிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள தாட்கோ அலுவலககங்களிலும் செயல்படுத்தபடும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் அரசு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் நிதி சார்ந்த பயிற்சி பெறுவதற்கு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.ஆதிதிராவிட மற்றும்  பழங்குடியின நலத்துறை சார்பில் தாட்கோ மூலம் தேர்வு செய்யப்படும் நூறு இளைஞர்களுக்கு நிதி மேலாண்மை, காப்பீடு, வங்கி சேவை உட்பட பல்வேறு நிதிசார்ந்த தொழில்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இந்த பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் பட்டபடிப்பு முடித்து இருக்க வேண்டும். இதற்கு ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் செமஸ்டர் தேர்வின் இறுதி பட்டியல் உள்ளிட்ட
ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் எனவும் மேலும் இது குறித்து கூடுதல் தகவல்களை
விரும்புவோர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் அல்லது 044-25246344
என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.