போராட்டத்தில் குதித்த இம்ரான்கான்! ராணுவத்தை களமிறக்கிய பாகிஸ்தான் அரசு!

0
70

சமீபத்தில் பாகிஸ்தானில் கடுமையான விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினார்கள்.

தன்னுடைய கூட்டணி கட்சி தலைவர்களும் கூட இம்ரான்கானுக்கு எதிராக செயல்பட்டார்கள். ஆகவே இம்ரான்கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸபாஷ் ஷெரிப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், தன்னுடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் வெளிநாட்டு சதி இருக்கிறது என்று தெரிவித்த இம்ரான்கான், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸபாஷ் ஷெரிப் புதிய பிரதமராக பொறுப்பேற்றதை ஏற்க மறுத்து வருகிறார்.

பாகிஸ்தான் தெஹ்ரிக் ஐ இன்சாப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி அவர் அவ்வபோது போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தன்னுடைய கட்சி ஆதரவாளர்களுடன் முன்னாள் பிரதமரின் இம்ரான்கான் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி நேற்று பேரணியாக சென்றார் என சொல்லப்படுகிறது.

பேரணியை தடுத்து நிறுத்துவதற்கு இஸ்லாமாபாத் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

தடுப்புகளை மீறி இம்ரான்கான் ஆதரவாளர்கள் தலைநகரை நோக்கி பேரணியாக செல்ல முயற்சி செய்தால் காவல்துறையினருக்கும், அவர்களுக்குமிடையே மோதல் உண்டானது.

இதில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் பலர் காயமடைந்தனர்.இந்த சம்பவம் காரணமாக, பாகிஸ்தானில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இப்படியான நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதத்தில் ராணுவ படைகளை நிலை நிறுத்துவதாக அந்த நாட்டு அரசு அறிவித்திருக்கிறது.

இம்ரான்கான் போராட்டத்தை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.