தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) 807 காலிப்பணியிடங்கள்!! விண்ணப்பிக்க கடைசி தேதி முடிந்து விட்டதா? 

0
170
#image_title

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) 807 காலிப்பணியிடங்கள்!! விண்ணப்பிக்க கடைசி தேதி முடிந்து விட்டதா? 

தமிழக அரசு கடந்த மாதம் 14ம் தேதி,  அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver – cum – conductor) பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) நிறுவனத்தில் காலியாக உள்ள 122 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும், செய்தித்தாள்களில் விளம்பரம் மூலமாகவும் பெறப்படும் விண்ணப்பங்கள் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து தகுதிவாய்ந்த நபர்களின் மூப்பு பட்டியலை,   ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பெறுவார் என்றும்,  ஓட்டுநர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் மேலாண் இயக்குநர் பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. 

மேலும் அந்தந்த போக்குவரத்துக் கழகங்களால் செய்தித்தாள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நேற்று தான் கடைசி நாள் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் போக்குவரத்துக் கழகங்கள் இது வரை செய்தித்தாளில் விளம்பரம் செய்து ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கவில்லை என்று  கூறப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணபிக்க விரும்புவோர் நிலவரங்களை  தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் இணையதளத்திலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம். மேலும், இது குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள உங்களுக்கு அருகில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று விசாரிக்கலாம்.

 

author avatar
Parthipan K