அரசு வேலைக்காக காத்திருக்கும் மக்கள்!! தமிழக அரசு விவரமாக அறிவிப்பு!!

0
133

அரசு வேலைக்காக காத்திருக்கும் மக்கள்!! தமிழக அரசு விவரமாக அறிவிப்பு!!

தமிழ் நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 நபர்கள் காத்து இருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது.

அதன்படி கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் 14 லட்சத்து ஆயிரத்து 894 பள்ளி மாணவர்கள் மற்றும் 19 முதல் 23 வயதுவரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 16 லட்சத்து 49 ஆயிரத்து 473 பேர், அதனைத் தொடர்ந்து 24 முதல் 35 வயது வரை உள்ள அரசு பணி வேண்டி காத்திருக்கும் வேலை நடுவர்கள் 24 லட்சத்து 88 ஆயிரத்து 254 பேர் ஆவர்.

மேலும், 36 வயது முதல் 57 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 12 லட்சத்து 26 ஆயிரத்து 417 பேர் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 ஆயிரத்து 907 என மொத்தம் 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர்.

மேலும் மாற்றுத்திறனாளிகளில் கை மற்றும் கால்களில் குறைபாடு உள்ள ஆண்கள் 69 ஆயிரத்து 730 பேர், பெண்கள் 36 ஆயிரத்து 411 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 41 பேர் பதிவு செய்திருக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து காதுகேளாதோர், வாய் பேசாத உறுப்பினர் ஆண்கள், பெண்கள் என்று மொத்தம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 515 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர் என தெரிவித்திருக்கின்றது.

author avatar
Jayachithra