மூணார் நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை: கடம்பூர் ராஜு விளக்கம்

0
75

மூணார் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் உள்ள வாரிசுகளுக்கு அரசு வேலை நியமனம் செய்வதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3.25 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த பெட்டி முடி ராஜ மலை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அங்கு தங்கியிருந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை, சட்டமன்ற உறுப்பினரும் செய்தி தொடர்பு மற்றும் விளம்பரம் துறை அமைச்சருமான கடம்பூர் ராஜு அங்கு நேரில் சென்று  பார்வையிட்டார்.

அங்கு இதுவரை 47 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் இன்னும் 28 பேரின் உடல்களைத் தேடி வருவதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனால் அன்னலட்சுமி, சரண்யா ஆகியோரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் 14 பேரை இழந்து தவிப்பது பற்றி தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை ஏற்பாடு செய்வதாக தமிழக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

மேலும் அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வீடிழந்தவர்களுக்கு நிரந்தரமாக புதிய வீடு அரசின் சார்பில் கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை அரசின் சார்பில் எடுத்துச் சென்று அவன் கட்டித்தர ஆவன செய்யும்.

மேலும் அங்கு உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்கள் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சென்றுவர தமிழக அரசானது கேரள அரசிடம் பேசி இ-பாஸினை பெற்றுத் தந்தது.  இவர்கள் அங்கு சென்று ஈமச்சடங்குகள் செய்ய வேண்டும். எத்தனை பேர் செல்ல வேண்டுமோ அவர்களுக்கு வாகன வசதியும் செய்து கொடுக்கப்படும்.

மேலும் அங்கு பாதிக்கப்பட்ட 4 பேருக்கு தலா 50,000, மற்றொரு 4 பேருக்கு தலா 25 ஆயிரம், வாகன செலவுக்கு 25 ஆயிரம் என 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அமைச்சர் கடம்பூர் ராஜு தனது சொந்த செலவில் வழங்கினார்.

author avatar
Parthipan K