இது என்ன அரசியல் மேடையா! அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்!

0
58

அரசு விழாவில் கூட்டணியை உறுதி செய்ததற்கு கண்டனங்கள் எழுந்திருக்கின்றனர்.

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கு பெற்று புதிய திட்டங்களை ஆரம்பித்து வைத்து அடிக்கல் நாட்டி இருக்கிறார். அரசியல் பேசப் போவதாக தெரிவித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விமர்சனம் செய்து இருக்கின்றார்.

அந்த விழாவில் பேசிய துணை முதலமைச்சர் அவர்கள் பிரதமர் மோடி அவர்களையும், அமித்ஷா அவர்களையும், புகழ்ந்து பேசிவிட்டு வருகிற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி தொடரும் என அறிவித்தார். அதிமுக பாஜக கூட்டணி அறிவிப்பு விழா போல நடத்தியதற்காக கண்டனம் எழுந்திருக்கின்றது.

திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன், தமிழ்நாட்டிற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வந்தது, அதிமுகவுடன் கூட்டணி சம்பந்தமாக பேசியது அரசு விழாவில் கலந்து கொண்டது என்று எதிலும் எங்களுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனாலும் அரசு விழா மேடையை அரசியல் மேடையாக மாற்றி எதிர்க்கட்சியினரை தன்னுடைய இஷ்டத்திற்கு குறை கூறி விட்டு அமித்ஷா போய் இருப்பது கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்தார்.

இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலுக்கு சமமாகும். அரசியலுக்கும், அரசுக்கும், கொஞ்சமும் வித்தியாசம் இல்லாமல் ஜனநாயகத்தை புதைத்து சர்வாதிகாரத்தை தலை நிமிர்த்த செய்திருக்கிறார்கள். நெறிமுறைகளை மீறிய மத்திய மாநில அரசுகள் இவ்வாறு நடந்து கொண்டிருப்பதை திமுக வன்மையாக கண்டிக்கின்றது என்று சாடி இருக்கின்றார்.

விசிக தலைவர் திருமாவளவன் பாஜக, மற்றும் அதிமுக கூட்டணி தொடரும் என அரசு விழாவில் போட்டிப் போட்டுக்கொண்டு ஓபிஎஸ், இபிஎஸ், ஆகியோர் அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் எந்த அளவிற்கு அரசியல் நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். என்பதை இந்த விவகாரத்தில் தெளிவாக தெரிகின்றது என்று கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்.

அதேபோல பல்வேறு கட்சியினரும் இந்த நிகழ்வைக் கண்டித்து கண்டன குரல்கள் எழுப்பியிருக்கிறார்கள்.