தப்பி தவறி இதை மட்டும் செய்து விடாதீர்கள்? மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

0
122

தற்போதுள்ள பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மற்றும் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தேர்வு செய்வது பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதுதான் ஷேர் மார்க்கெட்டிங்கில் ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ற ஆறு முதலீட்டாளர்கள் இதில் வருமானத்தை பெறுகிறார்கள்.

தன்னிடம் இருக்கின்ற சிறிய தொகை கூட பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது அதிக பணத்தை விரைவாக பெற்று நிற்க வேண்டும் என்பதற்காக இந்த பழக்கம் பொதுமக்களிடம் அதிகரித்து இருக்கிறது.

இதில் ஆபத்தான விஷயங்கள் இருந்தாலும் நம்பிக்கையின் அடிப்படையில் முதலீடு செய்து விடுகிறார்கள். சில முதலீட்டாளர்கள் குறிப்பாக தனியார் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவன தொழிலாளர்களுக்கு பங்குச் சந்தை வர்த்தகம் குறித்து இந்த கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனாலும் சில நிறுவனங்கள் இதற்கான அனுமதி வழங்குவதில்லை.

அதேநேரம் எந்த ஒரு அரசாங்க நிறுவனத்திலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு மத்திய அரசு பணி விதிகள் 1964ன் அடிப்படையில் சில வரைமுறைகள் இருக்கிறது. என்னென்ன பங்குச்சந்தை முதலீடு செய்தால் என்ன விதமான பாதிப்புகளை அவர்கள் சந்திக்க நேரும் என்பது தொடர்பாக இங்கே எல்லோரும் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது.

மத்திய அரசு பணி நடத்தை விதிகள் 1964ன் அடிப்படையில் எந்த அரசு ஊழியரும் அல்லது அவர்களுடைய உறவினர்கள் யாரும் செல்வாக்கு தரக்கூடிய எந்த ஒரு முதலீட்டையும் செய்ய அனுமதி இல்லை. குறிப்பாக எந்த அரசாங்க ஊழியரும், ஷேர்ஸ் ஸ்டாக்ஸ் அல்லது வேறு விதமான முதலீடுகளில் ஸ்பெக்லேட் செய்யக்கூடாது. ஒருவேளை வாங்க கலை அடிக்கடி வாங்கி விற்பனை செய்தாலும் இந்த விதியின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

தற்போது இருக்கின்ற சூழ்நிலையில், பங்குச்சந்தையில் அதிக ஆதாயங்களை பெறலாம் என்ற காரணத்திற்காக வர்த்தகத்தில் நீங்கள் ஈடுபடலாம். ஆனால் தங்களுடைய வேலையை இது பாதிக்கும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மத்திய அரசு விதிகளை பின்பற்றாமல் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தீர்கள் என்றால் தங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

அத்துடன் தவறான செயல்களில் ஈடுபட்டீர்கள் என்றால் தங்களுடைய பணியை நிறுத்தி வைப்பது முதல் தங்களை பணியில் இருந்து நீக்கம் செய்வது வரையில் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஒரு வேலை இப்படி நடக்கும் பட்சத்தில் நீங்கள் இதுவரையில் பணியாற்றுவதற்கான எந்தவித பண பலன்கள் மற்றும் ஓய்வூதியம் எதுவும் நீங்கள் பெற முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதிலும் குறிப்பாக தாங்கள் பங்குச்சந்தையில் தான் முதலீடு செய்யக்கூடாது என்பதை தவிர மியூச்சுவல் பண்ட் மற்றும் கடன் பத்திரங்கள் அரசு ஊழியர்கள் முதலீடு செய்து கொள்ளலாம் எனவும் இதற்கு தடை எதுவும் இல்லை என்று தெரிவிக்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.

மேலும் அரசு ஊழியர்கள் அவ்வப்போது பங்கு தரகர்கள் அல்லது முறையாக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற அல்லது தொடர்புடைய சட்டத்தின் கீழ் பதிவு சான்றிதழை பெற்ற மற்ற நபர்கள் மூலமாக முதலீடு செய்யலாம் என்ற நடைமுறையையும் இந்த விதிகள் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.