அரசின் இந்த நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

0
92
Let it run in full curfew! New announcement issued by the Government of Tamil Nadu!
Let it run in full curfew! New announcement issued by the Government of Tamil Nadu!

அரசின் இந்த நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

இந்த ஆண்டில் பல அரசு தேர்வுகள் நடக்க உள்ளது. இருப்பினும் இந்த கரோனா தொற்று காரணத்தினால் தேர்வுகள் நடைபெறுவது சற்று தாமதம் ஆகிக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் தமிழக அரசின் ஐஏஸ், ஐபிஎஸ் போன்ற இலவச பயிற்சி மையங்களில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த நுழைவுத்தேர்வு இம்மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. ஆனால் இந்த நுழைவு தேர்வானது ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

கொரானோ பெரும் தொற்று அதிகரித்து கொண்டே போவதன் காரணமாக அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதில் ஒன்று தான் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு. இந்த முழு ஊரடங்கு காரணத்தினால் இருபத்தி மூன்றாம் தேதி நடக்க இருந்த நுழைவுத்தேர்வை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் சென்னை மற்றும் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி தேர்வு பயிற்சி நிலையங்கள் ,கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கும் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலை தேர்வு 23 ஒன்றாம் தேதியன்று நடைபெற இருந்தது.

இதில் தேர்வு பெற்றவர்கள் கட்டணமில்லா பயிற்சி மையத்தில் சேர்ந்து கொள்ள முடியும். இதனடிப்படையில் தமிழ்நாட்டை சேர்ந்த 8,704 பேர் இணையதளம் விண்ணப்பித்தனர். மேலும் இந்த தேர்வானது 18 மையங்களில் நடைபெறும் எனக் கூறி இருந்தனர். தற்போது தொற்று அதிகரித்த காரணத்தினால் ஊரடங்கு போடப்பட்ட நிலையில் இத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளடைவில் தேர்வு எப்பொழுது நடைபெறும் என்ற தேதியை  பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறி உள்ளனர்.